7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. முன்பதிவிற்கான தொகை எவ்வளவு என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

தென் கொரியாவை மையமாகக் கொண்டு ஹூண்டாய் மோட்டார்ஸ், மிக விரைவில் ஏழு இருக்கைகளுடன் தயாராகியிருக்கும் அல்கஸார் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டு தற்போது காருக்கான முன்-பதிவை நாட்டில் ஹூண்டாய் தொடங்கியிருக்கின்றது.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

ஹூண்டாய் க்ரெட்டாவின் நீளமான பதிப்பாக அல்கஸார் பார்க்கப்படுகின்றது. ஆமாங்க, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரக காரை அடிப்படையாகக் கொண்டே அல்கஸார் எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு இருக்கை, பெரிய உருவம் கொண்டிருப்பதே அல்கஸார் எஸ்யூவியின் தனி சிறப்பாகும்.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

இக்காருக்கான முன்பதிவை இந்தியாவில் ஹூண்டாய் தொடங்கியிருக்கின்றது. ரூ. 25 ஆயிரம் என்ற குறைந்த தொகையில் காருக்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய தளம் வாயிலாக முன்பதிவு பணிகள் தொடங்கியுள்ளன.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

முழுக்க முழுக்க இந்த தொகை திரும்பப் பெறக்கூடியது ஆகும். ஆமாங்க, காரை புக் செய்த பின்னர் உங்களுக்கு கார் வேண்டாம் என நினைத்தால், புக்கிங்கை எந்தவொரு கட்டணும் இன்றி ரத்து செய்து கொள்ளலாம். ரத்து செய்த பின்னர் நீங்கள் செலுத்திய ரூ. 25 ஆயிரம் எந்தவொரு பிடித்தமும் இன்றி வழங்கப்படும்.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

ஹூண்டாய் க்ரெட்டா அடிப்படையில் இக்கார் உருவாக்கப்பட்டிருந்தாலும் சில தனித்துவமான அம்சங்களைய அல்கஸார் பெற்றிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதன்படி, லேசாக மாற்றியமைக்கப்பட்ட முகப்பு பகுதியை அல்கஸார் பெற்றிருக்கின்றது.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

முக்கொம்பு வடிவிலான புரஜெக்டர் முகப்பு மின் விளக்கு, 18 இன்சிலான வைரம் வடிவிலான அலாய் வீல் உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, மறு வடிவமைப்பு செய்யப்பட்ட வால் பகுதி மின் விளக்கு, புதிய ஸ்டைலிலான பம்பர், சில்வர் நிற மேற்கூரை தண்டவாளம், கருப்பு நிற பாடி கிளாடிங், சுறா கொம்பு அமைப்பிலான அன்டெனா உள்ளிட்டவற்றையும் அல்கஸார் காரில் காண முடிகின்றது.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

காரின் உட்பகுதி

இதுவரை பார்த்தது அனைத்தும் காருக்கு வெளியில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்கள் ஆகும். இதேபோன்று காருக்குள் பல சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், 10.25 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ப்ளூ லிங்க் இணைய வசதி உள்ளிட்டவை அல்கஸார் காரில் கிடைக்கும்.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

எஞ்ஜின்

1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின்,2.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜின் என இருவிதமான எஞ்ஜின் தேர்வுகளில் ஹூண்டாய் அல்கஸார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இக்கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான பின்னர் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திர எக்ஸ்யூவி 500 மற்றும் டாடா சஃபாரி ஆகிய எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கும்.

7 இருக்கை கொண்ட அல்கஸார் காருக்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன் தொகை ரொம்ப கம்மி...

இந்த மாதத்தின் இறுதிக்குள் ஹூண்டாய் அல்கஸார் விற்பனை அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஓர் பிரீமியம் ரக கார் என்பதால் ஹூண்டாய் க்ரெட்டாவைக் காட்டிலும் சில லட்சங்களை கூடுதல் விலையாகக் கொண்டு அறிமுகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Hyundai Alcazar SUV Seven Seater Bookings Starts In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X