ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசியமாக முன்பதிவு தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

2021ம் ஆண்டில் பல்வேறு எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய டாடா சஃபாரி போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இதுதவிர நடப்பாண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ, ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட கார்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

இதில், ஹூண்டாய் அல்கஸார் வரும் ஏப்ரல் 6ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதை தொடர்ந்து வரும் மே மாதம் அல்கஸார் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பிரீமியம் எஸ்யூவி காருக்கு ஒரு சில டீலர்களில் தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

அல்கஸார் எஸ்யூவிக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர் ஒருவர் சமூக வலை தளங்களில் தெரிவித்துள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசியபோது முன்பதிவு தொகை 50 ஆயிரம் ரூபாய் என தெரிவித்ததாக ரஷ்லேன் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

அத்துடன் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் டெலிவரி பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அல்கஸார் எஸ்யூவி காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக ஹூண்டாய் இந்திய நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

ஹூண்டாய் அல்கஸார் காருக்கான அதிகாரப்பூர்வமான முன்பதிவுகள் அடுத்த மாதத்தில் இருந்து ஏற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலம் காத்திருக்க முடியாது என்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்து, விரைவாக காரை டெலிவரி பெற பலர் விரும்புகின்றனர்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில டீலர்ஷிப்கள் தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை ஏற்க தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் அல்கஸார். 6 சீட்டர் மாடலிலும் ஹூண்டாய் அல்கஸார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

ஹூண்டாய் கிரெட்டாவை போல், அல்கஸாரும் விற்பனையில் சாதிக்கும் என ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது. ஹூண்டாய் கிரெட்டாவில் உள்ள அதே இன்ஜின் தேர்வுகள்தான், அல்கஸார் எஸ்யூவியிலும் வழங்கப்படவுள்ளது. இதன்படி 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகிய தேர்வுகளை ஹூண்டாய் அல்கஸார் பெறவுள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரகசிய முன்பதிவு... விரைவாக டெலிவரி பெற போட்டி போடும் வாடிக்கையாளர்கள்...

விற்பனைக்கு கொண்டு வரப்படும்போதுதான், ஹூண்டாய் அல்கஸாரின் விலை அறிவிக்கப்படும். எனினும் ஹூண்டாய் கிரெட்டாவை விட இதன் விலை 1 லட்ச ரூபாய் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த பின் புதிய டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உள்ளிட்ட கார்களுடன், ஹூண்டாய் அல்கஸார் போட்டியிடவுள்ளது.

Most Read Articles

English summary
Hyundai Alcazar Unofficial Bookings Open: Here Are All The Details. Read in Tamil
Story first published: Friday, March 26, 2021, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X