புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டம் அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் அதிரடி...

இந்திய வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டம் அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் அதிரடி...

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் மிக தீவிரமக ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதியில் விழாக்கால சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகளை நிறுவனம் வாரி வழங்கியது. தொடர்ந்து, அப்டேட் செய்யப்பட்ட புதிய வாகனங்களையும் நாட்டில் அது அறிமுகப்படுத்தியது.

புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டம் அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் அதிரடி...

இந்நிலையில், தற்போது புதிதாக 'ஷீல்ட் ஆஃப் ட்ரஸ்ட்' (நம்பிக்கையின் கேடயம்) என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றது ஹூண்டாய். இதன்மூலம் நாடு முழுவதும் குறைந்த கட்டண பராமரிப்பை வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. சுமார் 5 வருடங்களுக்கு வாடிக்கையாளர்களால் இந்த குறைந்த கட்டண பராமரிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டம் அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் அதிரடி...

தொடர்ந்து, கோளாறுள்ள பாகங்களையும் இந்த குறைந்த கட்டண பராமரிப்பு திட்டத்திலேயே மாற்றி தர இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த புதிய திட்டத்தின்மூலம் வாடிக்கையாளர்களால் பல்வேறு சேமிப்புகளைப் பெற முடியும் என நிறுவனம் நம்புகின்றது.

புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டம் அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் அதிரடி...

ஆகையால், புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு பெரியளவு சுமைகள் ஏதுமின்றி வாகனங்களைப் பராமரிக்க முடியும் எனவும் அது தெரிகின்றது. என்னென்ன உதிரிபாகங்களை ரீபிளேஸ் செய்ய முடியும்?, ஹூண்டாய் நிறுவனத்தின் இத்திட்டத்தின்கீழ் 14 விதமான பொருட்களை மாற்றிக்கொள்ள முடியும்.

புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டம் அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் அதிரடி...

அந்தவகையில், பிரேக், கிளட்ச் வைப்பர் பல்புகள், ஹோஸ் பெல்ட் உள்ளிட்ட பாகங்களை மாற்றிக் கொள்ள முடியும். புதிய வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு முதல் சர்வீஸ் இலவசம் அல்லது ஐந்து வருடங்கள் குறைந்த கட்டண பராமரிப்பு என்ற சலுகையை நிறுவனம் வழங்கி வருகின்றது.

புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டம் அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் அதிரடி...

ஹூண்டாய் நிறுவனம் கொரோனா வைரஸ் பரவல் காரணம் காட்டி தொடர்பில்லா மற்றும் டிஜிட்டல் சர்வீஸை செய்து வருகின்றது. இதுமட்டுமின்றி ஆன்லைன் வாயிலாக சர்வீஸுக்கான நாள், நேரம் ஆகியவற்றை முன்பதிவு செய்யும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஆகையால், வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தை நீண்ட நேரம் காத்திருந்து சர்வீஸுக்கு விட வேண்டும் என்ற அவல நிலை போக்கப்பட்டுள்ளது.

புதிய குறைந்த கட்டண பராமரிப்பு திட்டம் அறிமுகம்... வாடிக்கையாளர்களை கவர ஹூண்டாய் அதிரடி...

தொடர்ந்து, சர்வீஸுக்கான வாகனங்களை பிக்-அப் மற்றும் ட்ராப் செய்யும் சேவையை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. தற்போது வரை ஹூண்டாய் நிறுவனத்தின்கீழ் 1,298 ஓர்க்ஷாப்புகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களின் வாயிலாக தனது புதிய நம்பிக்கையின் கேடயம் என்ற திட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்றது.

Most Read Articles

English summary
Hyundai Announces Low-Cost Car Maintenance Program For Indian Customers. Read In Tamil.
Story first published: Monday, February 22, 2021, 15:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X