ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

இந்தியா உள்பட பல நாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள 2021 ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ள சிறிய எஸ்யூவி கார் வருகிற மார்ச் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

புதிய தலைமுறை ஐ20 காரின் வெற்றியை தொடர்ந்து ஹூண்டாயின் ஆரம்ப நிலை பி-பிரிவு எஸ்யூவி காராக பேயோன் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

ஹூண்டாயின் புதிய ஐ20-இன் அதே விவேகமான ஸ்போர்டினஸ் டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால் பேயோன் எஸ்யூவி காரிலும், மெஷ்-டைப் ட்ரெப்சாய்டல் க்ரில், முக்கோண வடிவில் ஹெட்லேம்ப் மற்றும் சற்று உயரமாக பொருத்தப்பட்ட நேர்த்தியான எல்இடி டிஆர்எல்கள் என அந்த ஹேட்ச்பேக் காரின் அடையாளங்களை எதிர்பார்க்கலாம்.

ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

இரட்டை-நிற பெயிண்ட்டில் வழங்கப்படவுள்ள சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங்களை பெற்றுவரவுள்ள இந்த எஸ்யூவி காரில் மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா உள்ளிட்டவையும் வழங்கப்படவுள்ளன.

ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

பின்பக்கத்தில் சறுக்கலின்போது வாகன சேதத்தை குறைக்கும் ஃபாக்ஸ் தட்டு, பூமாரங் வடிவிலான டெயில்லேம்ப்கள் போன்றவை பொருத்தப்படவுள்ளன. இந்த நடுத்தர அளவு எஸ்யூவி காரின் உட்புற கேபின் குறித்த விபரங்கள் எதுவும் பெரிய அளவில் நமக்கு கிடைக்க பெறவில்லை.

ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

ஆனால் இதன் கேபின், இந்தியாவிலும் விற்பனையில் இருக்கும் 2020 ஐ20-ஐ பெரிய அளவில் ஒத்து காணப்படும். இதனால் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், இயங்கும் பாதையை கண்காணிக்கும் அமைப்பு, வேகத்தை நிர்ணயிக்கும் அடாப்டிவ் சிஸ்டம், முன்பக்க மோதலை தடுக்கும் அமைப்பு உள்பட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.

ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

அதேபோல் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20-ன் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினையும் பேயோனில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கலாம். அதிகப்பட்சமாக 84 எச்பி மற்றும் 117 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

அதேநேரம் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டாரை உள்ளடக்கிய மைல்ட்-ஹைப்ரீட் தேர்விலும் இந்த எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம். இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுடன் கொடுக்கப்படலாம்.

ஐ20 ஹேட்ச்பேக்கின் அடிப்படையிலான ஹூண்டாயின் எஸ்யூவி கார்!! வருகிற மார்ச் 2ல் அறிமுகமாகிறது...

நமது இந்திய சந்தையில் ஏற்கனவே ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் க்ரெட்டா எஸ்யூவி கார்கள் நல்லப்படியாகவே விற்பனையாகி கொண்டிருப்பதால், அவற்றிற்கு மத்தியில் வேறொரு எஸ்யூவி காரை ஹூண்டாய் கொண்டுவர வேண்டிய சூழல் தற்போதைக்கு இல்லை.

Most Read Articles

English summary
Hyundai teases new Bayon SUV ahead of global unveiling on March 2
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X