ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

ஹூண்டாய் பையான் எஸ்யூவி கார் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

ஹூண்டாய் பையான் (Hyundai Bayon) எஸ்யூவி கார் இன்று (மார்ச் 2) அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஐ20 ஆக்டிவ் காருக்கு மாற்றாக பல்வேறு சர்வதேச சந்தைகளில் ஹூண்டாய் பையான் விற்பனைக்கு வரவுள்ளது. ஐரோப்பிய வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த புதிய எஸ்யூவியை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

சமீபத்திய ஐ20 காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஹூண்டாய் பையான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் வெளிப்புற டிசைன் வித்தியாசமாக உள்ளது. வெளிப்புற டிசைனை பொறுத்தவரை, கிட்டத்தட்ட சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட கோனாவை போன்று உள்ளது என கூறலாம். இதில், மெல்லிய பகல் நேர விளக்குகள் மற்றும் அம்புக்குறி வடிவ ஹெட்லேம்ப்கள் அடங்கும்.

ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

ஹூண்டாய் ஐ20 காரை போலவே, புதிய பையானும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் வாகனம்தான். அதேபோல் பையான் எஸ்யூவியின் இன்டீரியர் கிட்டத்தட்ட ஐ20 போலவே உள்ளது. ஐ20 காரில் இருந்து பெரும்பாலான அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், முழுமையான கருப்பு வண்ண டேஷ்போர்டு, ஸ்விட்ச்கியர், ஸ்டியரிங் வீல் மற்றும் 10.25 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.

ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

அத்துடன் ஹூண்டாய் ஐ20 காரை போலவே, பையான் காரின் வீல் பேஸ் நீளமும் 2,580 மிமீ-ஆகதான் உள்ளது. அதே சமயம் ஹூண்டாய் பையான் எஸ்யூவியில் 411 லிட்டர் பூட் ரூம் இட வசதி வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கைகளை மடித்து வைத்து கொள்வதன் மூலம் இதனை 1,205 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

ஹூண்டாய் பையான் எஸ்யூவியில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும். இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 84 ஹெச்பி பவரை உருவாக்க கூடியது. இதுதவிர மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அதிக சக்தி வாய்ந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ஹூண்டாய் பையான் எஸ்யூவி பெற்றுள்ளது.

ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

100 ஹெச்பி மற்றும் 120 ஹெச்பி பவர் என மொத்தம் 2 விதமான ட்யூனிங்கில் இந்த இன்ஜினை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இங்கிலாந்து போன்ற நாடுகளில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படும். அங்கு 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வை ஹூண்டாய் நிறுவனம் வழங்காது.

ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஐஎம்டி ஆகிய தேர்வுகள் வழங்கப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஹூண்டாய் பையான் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்தவிதமான தகவலும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?

இந்திய சந்தையை பொறுத்தவரை ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மற்றும் வெனியூ ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களும் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்த இரண்டு எஸ்யூவிகளும் தங்களது செக்மெண்ட்டில் மிக சிறப்பான மார்க்கெட் ஷேரை கைவசம் வைத்துள்ளன. எனவே பையான் எஸ்யூவியை ஹூண்டாய் இந்தியாவிற்கு கொண்டு வருவது கொஞ்சம் சந்தேகம்தான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 2, 2021, 19:15 [IST]
English summary
Hyundai Bayon SUV Unveiled - Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+