இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

இந்திய சந்தையில் 2022ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார்களான சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 ஆகிய கார்களும், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான வெனியூவும், மிட்-சைஸ் எஸ்யூவி காரான கிரெட்டாவும் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

இந்த சூழலில் கடந்த 2021ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து 2022 புத்தாண்டு தற்போது பிறந்துள்ளது. 2022ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். ஹூண்டாய் கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த செய்தி உதவும்.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

ஹூண்டாய் காஸ்பர் (Hyundai Casper)

இது மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த கார் தென் கொரிய சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அங்கு 2 இன்ஜின் தேர்வுகளுடன் காஸ்பர் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 67 ஹெச்பி பவரை உருவாக்க கூடியது. அதே நேரத்தில் டர்போ இன்ஜின் தேர்வும் இந்த காரில் வழங்கப்படுகிறது.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 ஹெச்பி பவரை உருவாக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர் பாக்ஸ் தேர்வுகளையும் இந்த கார் பெற்றுள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட்களில் சன்ரூஃப் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. இந்திய சந்தையில் முழு எல்இடி லைட்கள் மற்றும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் (New-Gen Hyundai Tucson)

ஹூண்டாய் டூஸான் கார் கடந்த 2004ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து உலகம் முழுவதும் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட, அதாவது 70 லட்சத்திற்கும் மேற்பட்ட டூஸான் கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை மூன்றாவது தலைமுறை டூஸான் கார்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

ஆனால் ஹூண்டாய் நிறுவனம் நான்காவது தலைமுறை டூஸான் காரை ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இது 2022ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் டிசைன், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

ஹூண்டாய் ஸ்டார்கஸார் (Hyundai Stargazer)

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய எம்பிவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது ஸ்டார்கஸார் என்ற பெயரில் அழைக்கப்படலாம். இந்த கார் இந்தோனேஷியாவில் சாலை சோதனை செய்யப்படும்போது சமீபத்தில் கேமராவின் கண்களில் சிக்கியது. அப்போது இந்த காரின் உருவம் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

கியா நிறுவனம் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் கேரன்ஸ் என்ற எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. பல்வேறு அம்சங்களில் கியா கேரன்ஸ் காரும், ஹூண்டாய் ஸ்டார்கஸார் காரும் ஒன்று போலவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கியா கேரன்ஸ் காரில் வழங்கப்படும் இன்ஜின் தேர்வுகள்தான் ஹூண்டாய் அல்கஸார் காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

ஆனால் டிசைன் என்ற விஷயத்தில் கியா கேரன்ஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய இரண்டு கார்களும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதேபோல் விலையும் இரண்டு கார்களுக்கும் வெவ்வேறாக நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த 2 கார்களில் கியா கேரன்ஸ்தான் முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஹூண்டாய் ஸ்டார்கஸார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

ஹூண்டாய் ஐயோனிக்5 (Hyundai IONIQ5)

E-GMP பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஹூண்டாய் ஐயோனிக்5 கார் ஏற்கனவே சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு விட்டது. இந்த காரில் 2 பேட்டரி தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களும் இடம்பெற்றுள்ளன. 58 kWh மற்றும் 72.6 kWh என மொத்தம் 2 பேட்டரி தேர்வுகளை இந்த கார் பெற்றுள்ளது.

இத்தனை கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய போகிறதா? எதை வாங்கறது, எதை விட்றதுனே தெரியலியே!

பிரீமியம் எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டில் இந்த கார் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இந்த கார் இறக்குமதிதான் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விலை உயர்ந்த காராக இது இருக்கலாம். ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hyundai cars launching in 2022 in india casper new gen tucson stargazer ioniq5
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X