ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

கடந்த 2021 அக்டோபரில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

இந்தியாவில் அதிகளவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால், அதில் நிச்சயமாக ஹுண்டாய் மோட்டார்ஸும் முன்னிலையில் இருக்கும். அதிலும் குறிப்பாக, தற்போதைய ட்ரெண்டாக உள்ள எஸ்யூவி கார்களை நம் நாட்டு சந்தையில் அதிகம் விற்பனை செய்வதில் இந்த தென்கொரிய நிறுவனமே முதலிடம் வகிக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 37,021 கார்களை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 34.60 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 56,605 ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

இந்த வகையில் ஏறக்குறைய 20 ஆயிரம் ஹுண்டாய் கார்கள் கடந்த மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டிருப்பதற்கு காரணம், ஹூண்டாயின் சமீப கால முதன்மையான விற்பனை மாடல்களாக விளங்கிவந்த க்ரெட்டா மற்றும் ஐ10 நியோஸின் விற்பனை கடந்த மாதத்தில் பெரிய அளவில் குறைந்திருப்பதுதான்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

இருப்பினும் இதற்கு முந்தைய 2021 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்த ஹூண்டாய் கார்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாத 37,021 யூனிட்கள் விற்பனை எண்ணிக்கை 11.89% அதிகமாகும். அதாவது கடந்த செப்டம்பரை காட்டிலும் கடந்த அக்டோபரில் அதிக எண்ணிக்கையில் ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

2021 செப்டம்பரில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 33,087 ஆகும். அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் வரையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராகவும், எஸ்யூவி காராகவும் க்ரெட்டா விளங்கி வந்தது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

ஆனால் கடந்த மாதத்தில் க்ரெட்டாவின் விற்பனை சரிய, பல மாதங்களுக்கு பிறகு அதிகம் விற்பனையான ஹூண்டாய் காராக கடந்த அக்டோபரில் வென்யூ முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 10,554 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2020 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட வென்யூ கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 19.55% அதிகமாகும். ஏனென்னில் அந்த மாதத்தில் 8,828 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

கடந்த செப்டம்பர் மாதத்திலும் வென்யூ கார்களின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் கடந்த அக்டோபரில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்து 10,554 வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. மேலும் கடந்த மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்கப்பட்ட ஒரே ஹூண்டாய் மாடல் வென்யூ ஆகும்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

இதற்கடுத்த இரண்டாவது இடத்தில் தான் க்ரெட்டா நடுத்தர-அளவு எஸ்யூவி கார் உள்ளது. கடந்த ஆண்டில் இதே அக்டோபரில் சுமார் 14,023 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 6,455 க்ரெட்டா கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்தியாவில் க்ரெட்டா கார்களின் விற்பனை பாதியாக (53.97%) குறைந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

இன்னும் சொல்லப்போனால், தற்போதைய விற்பனை எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரித்தாலும் 2020 அக்டோபர் மாத க்ரெட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கையை எட்ட முடியாது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய செப்டம்பரிலும் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாக, 8,193 க்ரெட்டா கார்களே விற்கப்பட்டு இருந்தன. இதில் இருந்து இரண்டாம் தலைமுறை க்ரெட்டா காருக்கான மோகம் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மெல்ல மெல்ல குறைந்து வருவதை அறிய முடிகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

இதனை கருத்தில் கொண்டுதான், ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஆண்டில் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரினை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதன் அறிமுகத்திற்கு பிறகாவது க்ரெட்டா கார்களின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ஐ10 நியோஸ் உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கான மவுசு குறையுது!! பாதியாக குறைந்த விற்பனை, மீண்டும் கவனம் பெறும் வென்யூ!

ஹூண்டாயின் பிரபலமான மற்றும் மலிவான ஹேட்ச்பேக் காரான ஐ10 நியோஸும் 2020 அக்டோபரில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் 6,042 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. க்ரெட்டாவிற்கும் இதற்கும் சில நூறு யூனிட்கள் மட்டும் தான் வித்தியாசம். ஆனால் உண்மையில், 2021 செப்டம்பருடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் நியோஸ் கார்களின் விற்பனை 44.96% அதிகரித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai cars sales oct 2021 venue tops
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X