போற போக்க பாத்த TataPunch-க்கு போட்டியே இருக்காதுபோல! பின் வாங்கிய ஹூண்டாய்! போச்சு... ரொம்ப எதிர்பார்த்தோம்!

Tata Punch-க்கு போட்டியாக வர இருந்த Hyundai Casper மைக்ரோ எஸ்யூவி ரக காரின் இந்திய வருகை தற்போது சந்தேகமாகியுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அதிர்ச்சி தகவலை கீழே காணலாம், வாங்க.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

Tata (டாடா) நிறுவனம் இந்திய சந்தைக்காக ஓர் குட்டியான எஸ்யூவி ரக காரை தயாரித்து வருகின்றது. Punch எனும் பெயர் கொண்ட அக்கார் மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கிறது. இந்த காருக்கு போட்டியாக Hyundai நிறுவனம் Casper எனும் மைக்ரோ எஸ்யூவி ரக காரை இாந்தியால் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூவிற்கு கீழே அமரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால், குட்டியான தோற்றம் கொண்ட இந்த கேஸ்பர் மலிவு விலையிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால், இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இக்கார்குறித்த தகவல் அமைந்தது. ஆனால், இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது தற்போது சந்தேகம் என தெரிய வந்துள்ளது.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

ஆம், ஹூண்டாய் கேஸ்பர் இந்தியாவில் இப்போதைக்கு விற்பனைக்கு வராது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து PowerDrift வெளியிட்டிருக்கும் முகப்புத்தக பதிவில், "கேஸ்பர் மைக்ரோ எஸ்யூவி ஸ்பெஷலாக தென் கொரியாவின் இலக ரக கார் சந்தையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், அந்நாட்டின் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே அக்கார் வடிவமைக்கப்பட்டிருப்பதாக" தெரிவித்துள்ளது.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

இத்துடன், "தற்போது வெளியாகியிருக்கும் பல்வேறு தகவலின்படி, ஹூண்டாய் கேஸ்பர் மைக்ரோ இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வராது" என்றும் பவர்ட்ரிஃப்ட் அதன் பதிவில் தெரிவித்திருக்கின்றது. கொரிய அரசாங்கம், 3.6 மீ அல்லது 3.600 மிமீ நீளமுடைய வாகனங்களுக்கு சிறப்பு சலுகையாக குறைந்த வரி விதிக்கப்படுகின்றது.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

அனைவரும் எளதில் காரை வாங்கும் பொருட்டு இத்தகைய சலுகையை கொரிய அரசு வழங்கி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டே ஹூண்டாய் கேஸ்பர் காரை உறுவாக்கியிருக்கின்றது. ஆகையால், இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேவேலையில், முன்னணி ஊடகங்கள் சில வெளியிட்டிருக்கும் தகவலும் இதையே உறுதிப்படுத்தியுள்ளன.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

ஹூண்டாய் கேஸ்பர் காரை நிறுவனம் கே1 காம்பேக்ஸ் கார் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கியிருக்கின்றது. இந்த கார் 3,595 மிமீ நீளம், 1,595 மிமீ அகலம் மற்றும் 1,575 மிமீ உயரம் ஆகிய அளவுகளில் உருவாகியிருக்கின்றது. இத்துடன், ஹூண்டாய் சேன்ட்ரோ மற்றும் கிராண்ட் ஐ10 நியாஸ் கார்களில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களைக் கொண்டு கேஸ்பர் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

இந்த அளவு காம்பேக்ட்டான அளவு இந்திய சந்தைக்கு பொருந்தாத வாகனம் வாகன உலகம் சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேலையில் இக்கார் பல்வேறு கவர்ச்சிகரமான வசதிகளில் உருவாகி இருக்கின்றது. இந்த கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் உருவாகியிருக்கின்றது. 1.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளைக் கொண்டிருக்கின்றது.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

கிராண்ட் ஐ10, நியாஸ் டர்போ மற்றும் அவரா டர்போ ஆகிய கார்களில் இதே எஞ்ஜின் வசதியுடைய எஞ்ஜினே வழங்கப்பட்டு வருகின்றது. இந்த எஞ்ஜின் 4 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளிட்ட தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், ஸ்பிளிட் ஹெட்லேம்ப் எல்இடி டிஆர்எல் வசதிகளுடன், கிளாம்ஷெல் பான்னட், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், இரு நிற ரூஃப் டெயில், ஓஆர்விஎம்கள், பாரமெட்ரிக் அணிகலன் டைப்பிலான எல்இடி மின் விளக்குகள் வால் பகுதியில், ரூஃபுடன் இணைந்த ஸ்பாய்லர் போன்ற வசதிகள் கேஸ்பர் மைக்ரோ எஸ்யூவில் வழங்கப்பட இருக்கின்றது.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

இத்தகைய வசதிகளுடனேயே ஹூண்டாய் கேஸ்பர் டாடா பஞ்சிற்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் வருகை தற்போது கேள்விக் குறியாக மாறியிருப்பதால் போட்டியில்லாமல் டாடா பஞ்ச் இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போர போக்க பாத்த Tata Punch-க்கு போட்டியே இருக்காது போல... பின் வாங்கிய ஹூண்டாய்... ரொம்ப எதிர்பார்த்துனு இருந்தோம்!

அதேவேலையில் டாடா பஞ்சிற்கு போட்டியே இல்லை என் நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த காருக்கு மாருதி சுசுகிக இக்னிஸ், ஃபோர்ட் ஃபரீ ஸ்டைல் மற்றும் மஹிந்திரா கேயூவி100 ஆகிய கார்கள் போட்டியளிக்கும் வகையில் இருக்கின்றன. ஹூண்டாய் கேஸ்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமானால் இக்காருக்கும் மேலே பார்த்தவை போட்டியாக இருக்கும்.

Source: PowerDrift

Most Read Articles
English summary
Hyundai casper may not launch in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X