என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்தது பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!

தென் கொரியாவைச் சார்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், இன்றுடன் இந்தியாவில் கால் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை இந்நிறுவனம் இந்தியாவில் 9 மில்லியனுக்கும் அதிகமான யூனிட் வாகனங்களை நாட்டில் விற்பனைச் செய்திருக்கின்றது.

என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!

இப்போது இந்நிறுவனம் க்ரெட்டா, வெர்னா, வென்யூ மற்றும் கிராண்ட் ஐ20 போன்ற நவீன ரக கார்களை விற்பனைச் செய்து வந்தாலும், ஆரம்பத்தில் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்றது சேன்ட்ரோ கார் மாடலே. இது அந்த காலகட்டத்தில் மாருதி சுசுகியின் 800 மாடலுக்கு கடும் போட்டியை வழங்கி வந்தது.

என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் நாட்டின் இரண்டாம் மாபெரும் கார் உற்பத்தி நிறுவனம் என்ற சான்றை இக்காரே பெற்றுக் கொடுத்தது. இந்நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலை சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலேயே இயங்கி வருகின்றது. இந்த ஆலையை 1996ஆம் ஆண்டு மே 6ம் தேதி நிறுவனம் தொடங்கியது.

என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!

அப்போது சேன்ட்ரோ காரை முதன்மையான வாகனமான நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தியர்கள் இக்காருக்கு அமோகமான வரவேற்பை வழங்கியதை அடுத்து ஐ20, கெட்ஸ், அக்சென்ட் உள்ளிட்ட பிற மாடல்களையும் ஹூண்டாய் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் அதன் சாம்ராஜ்யத்தை மேலும் விரிவாக்கம் செய்ய பெரும் உதவியை வழங்கியது.

என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!

இப்போது, மேற்கூறியதில் பல்வேறு மாடல்கள் வெளியேற்றப்பட்டுவிட்டன. இவற்றிற்கு நவீன மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட எஸ்யூவி, ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக கார்களை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த கார்களை விற்பனைச் செய்வதற்காக சுமார் 1,154 அவுட்லெட்டுகளையும், விற்பனைக்கு பிந்தைய சேவையை வழங்குவதற்காக 1,298 மையங்களையும் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!

கடந்த 2020ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனையாகிய ஒட்டு மொத்த வாகன விற்பனையில் 17.4 சதவீதம் ஹூண்டாய் நிறுவனத்துடையதாகும். இதேபோன்ற சிறந்த விற்பனை வளர்ச்சியை வரும்காலங்களிலும் பெற வேண்டும் என்பதற்காக நிறுவனம் புதிய தயாரிப்புகளை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

என்ன சொல்றீங்க ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இத்தனை ஆண்டுகள் ஆகிறதா?.. நம்பவே முடியல!!

இந்தியாவில் தயார் செய்யப்படும் கார்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகள் சிலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், உலகின் 88 நாடுகளுக்கு ஹூண்டாய் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையிலேயே தனது 25ம் ஆண்டு இந்திய வருகை தின கொண்டாட்டத்தில் ஹூண்டாய் மூழ்கியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Hyundai Completes 25 Years In India; Here Is full Details. Read In Tamil.
Story first published: Wednesday, February 17, 2021, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X