க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு நல்ல வரவேற்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கிடைத்து வருகிறது. இதனை தொடர்ந்து நீட்டிக்கும் வகையில் இந்த காரில் சில அப்கிரேட்களையும், சில தற்போதைய வசதிகளை நீக்குவதையும் தயாரிப்பு மேற்கொள்ளவுள்ளது.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

இதன்படி க்ரெட்டாவின் ஆரம்ப நிலை இ ட்ரிம் ஆனது விலை அதிகரிப்பை பெறாமல் இருப்பதற்காக சில வசதிகளை இழக்கவுள்ளது. அதேநேரம் மற்ற ட்ரிம்கள் கூடுதல் வசதிகளை பெறவுள்ளன. அவை என்னென்ன என்பது தான் தற்போது ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு தெரியவந்துள்ளன.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

க்ரெட்டாவின் டாப் வேரியண்ட்களான எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ்(ஒ) ட்ரிம்கள் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் புதிய் குரல் கட்டளைகளுக்கான ஓவர்-தி-ஏர் (ஒடிஏ) என்ற இணைப்பு வசதியை பெறவுள்ளன.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

மேலும் இந்த விலைமிக்க வேரியண்ட்கள் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் உடன் புதிய ஸ்மார்ட் கீ மற்றும் டேஸ்போர்டில் மென்மையான பெயிண்ட் ஃபினிஷிங்கை ஏற்கவுள்ளன. மத்திய இஎக்ஸ் மற்றும் எஸ் வேரியண்ட்கள் வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளை பெறவுள்ளன.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

தற்சமயம் இந்த வசதிகளை ஸ்மார்ட்போனை வயர் மூலம் காருடன் இணைப்பதன் மூலமாகவே பெற முடிகிறது. விலை குறைவான இ ட்ரிம்-இல் மிக முக்கியமானதாக எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பக்கவாட்டு கண்ணாடிகள் நீக்கப்படவுள்ளன.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

அதேபோல் இந்த வேரியண்ட் பொருட்களை வைக்கும் பகுதியில் வழங்கப்படும் விளக்கு மற்றும் பயணிகள் இருக்கைக்கு பின்பகுதியில் வழங்கப்படும் பாக்கெட்டையும் இழந்துள்ளது. மேலும் இ ட்ரிம்-இல் பக்கவாட்டு கண்ணாடியில் வழங்கப்பட்டு வந்த டர்ன்-இண்டிகேட்டர்கள் முன்பக்க ஃபெண்டர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

இந்த வசதிகள் குறைப்பினால் காரின் விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் க்ரெட்டா கார்களின் விலைகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகரித்து இருந்தது.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

இந்த அப்டேட் வாய்ப்பை பயன்படுத்தி வெவ்வேறான குரல் வாழ்த்துகளை காரை ஸ்டார்ட் செய்யும்போது தெரிவிக்கும் வசதியையும் ஹூண்டாய் கொண்டுவரவுள்ளது. ஏற்கனவே கூறியதுதான், ஹூண்டாய் க்ரெட்டா கார்களின் விற்பனை ஆரம்பத்தில் இருந்தே நல்லப்படியாக இருந்து வருகிறது.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து தற்போதைய கொரோனா சூழலுக்கு மத்தியிலும் சிறந்த விற்பனை எஸ்யூவி காராக க்ரெட்டா விளங்கி வருகிறது.

க்ரெட்டா கார்களில் இத்தனை புதிய வசதிகளா!! அதிரடி நடவடிக்கையில் ஹூண்டாய்!

எந்த அளவிற்கு என்றால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 1.2 லட்சத்திற்கும் அதிகமான க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சன் அல்கஸார் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது, இன்னும் அறிமுகமாகவில்லை.

Most Read Articles

English summary
Hyundai Creta To Get New Features, Improved Connectivity – Details Leak.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X