Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினியிடம் ஆணையம் கண்டிப்பாக விசாரிக்கும் - வக்கீல்
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எஸ்யூவி கார்கள் என்றாலே ஹூண்டாய் தான்!! வெறும் 5 வருடங்களில் 10 லட்ச கார்கள் விற்பனை!
இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனையில் 10 லட்சத்தை கடந்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகிக்கு அடுத்து அதிகளவில் கார்களை நம் நாட்டில் விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது.

இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்காக ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையில் தான் தற்போது ஹூண்டாய் நிறுவனம் 10 லட்சம் என்ற இமாலய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஹூண்டாய் நிறுவனத்திற்கு க்ரெட்டா & வென்யூ கார்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை சொல்லியே ஆக வேண்டும். 2015ல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டா இதுவரையில் மட்டுமே 5.9 லட்சம் யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் 2.2 மில்லியன் க்ரெட்டா கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் இரண்டாம் தலைமுறை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் க்ரெட்டாவின் பிரபலம் மேலும் அதிகரித்தது.

எந்த அளவிற்கு என்றால், தற்போதைக்கு அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார் க்ரெட்டா தான். இதற்கு காரணம், பனோராமிக் சன்ரூஃப், தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தக்கூடிய இருக்கைகள், ப்ளூலிங்க் இணைப்பு கார் தொழிற்நுட்பம் உள்பட ஏகப்பட்ட அப்கிரேட்கள் புதிய க்ரெட்டாவில் கொண்டுவரப்பட்டன.

ஹூண்டாயின் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரான வென்யூ 2019ல் தான் நம் நாட்டு சந்தையில் விற்பனைக்கு அறிமுகமானது. இணைக்கப்பட்ட கார் தொழிற்நுட்பத்துடன் (ஹூண்டாய் ப்ளூ லிங்க்) கொண்டுவரப்பட்ட இந்தியாவின் முதல் வாகனமான வென்யூவில் ஏகப்பட்ட என்ஜின் தேர்வுகள் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படுகின்றன.

இதில் ஐஎம்டி (இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்)-யும் அடங்குகிறது. இவையே இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு கிடைக்கும் வரவேற்புக்கு மிக முக்கிய காரணமாகும். 2015ஆம் ஆண்டிலேயே எஸ்யூவி கார்களின் விற்பனையில் 1 லட்சத்தை கடந்த ஹூண்டாய் 2 லட்சத்தை அதற்கடுத்த 2016ல் எட்டியது.

2017ல் ஹூண்டாயின் எஸ்யூவி கார்களின் விற்பனை 3 லட்சத்தை கடக்க அரை மில்லியன், அதாவது 5 லட்சம் என்ற மைல்கல்லை இந்த தென் கொரிய நிறுவனம் 2018ல் வந்தடைந்தது. அதன்பின் வென்யூ அறிமுகமாக, ஒவ்வொரு வருடத்திலும் எளிதாக 2 லட்ச எஸ்யூவி கார்களை இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்தது.

இதன்படி அடுத்த 2019ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக இந்த விற்பனை பயணத்தில் 7 லட்சத்தை கடந்த இந்த நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு வரையில் 9 லட்சத்தை கடந்து 1 மில்லியனை நெருங்கிவிட்டது, தற்போது 1 மில்லியனையும் கடந்துவிட்டது.