காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் திருவள்ளூர் ஆட்சியரிடத்தில் 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இன்று வழங்கியது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

நாடு முழுவதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகின்றது. கோவிட்-19 வைரசால் பாதிப்படைபவர்களின் அருமருந்தாக தற்போது ஆக்சிஜனே இருக்கின்றது. இந்த நிலையில் இதன் பற்றாக்குறை தலை விரித்தாடுவதால் நாட்டில் ஆங்காங்கே உயிர் சேதங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றன.

காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

இந்த நிலையைப் போக்கும் விதமாக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவிக் கரம் நீட்டி வருகின்றன. இதனடிப்படையில் ஆக்சிஜன் உருளைகள், செறிவூட்டிகள் மற்றும் ஜெனரேட்டர்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

காஞ்சிபுர ஆட்சியருடன் ஹூண்டாய் அதிகாரிகள்

ஹூண்டாய் நிறுவனம், 'ஹூண்டாய் கேர் 3.0' எனும் திட்டத்தின்கீழ் அரசுகளுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில், அண்மையில் தலைமை செயலகத்தில் தமிழக முதலைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்த ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரிகள் ரூ. 5 கோடிக்கான காசோலையை வைரஸ் நிவாரண நிதியாக வழங்கினர்.

காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

திருவள்ளூர் ஆட்சியருடன் ஹூண்டாய் அதிகாரிகள்

இதுமட்டுமின்றி, ரூ. 5 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் அவர்கள் வழங்கினர். இதன் தொடர்ச்சியாக, அண்மையில் காஞ்சிபுர மாவட்டத்திற்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியது.

காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

காஞ்சிபுரம் மாவட்டத்தைத் தொடர்ந்து தற்போது திருவள்ளூர் மாவட்டத்திற்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கினர்.

காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின்கீழ் கோவிட் -19 நிவாரண பணிகளை, ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மகாராஷ்டிரா, ஹரியானா, புது தில்லி மற்றும் தெலுங்கானா போன்ற பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் மாநிலங்களுக்கும் ஹூண்டாய் அதன் அறக்கட்டளை வாயிலாக உதவிகளை வாரி வழங்கி வருகின்றது.

காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர் மக்களுக்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்... தொடரும் சேவை!!

ஹூண்டாய் நிறுவனம் அரசுக்கு உதவி வரும் அதேவேலையில் தனது ஊழியர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வருகின்றது. தமிழகத்தின் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து சம்பளத்துடன் கூடிய குறிப்பிட்ட நாட்கள் விடுப்பை நிறுவனம் அண்மையில் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Hyundai Foundation Delivers 40 Oxygen Concentrators To Thiruvallur District. Read In Tamil.
Story first published: Saturday, May 29, 2021, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X