திருடப்பட்ட விலையுயர்ந்த கார்! 40நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்.. எப்படி தெரியுமா?

திருடப்பட்ட ஹூண்டாய் காரை வெறும் 40 நிமிடங்களில் காவல்துறையினர் மீட்டெடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஐ10 காரும் ஒன்று. இந்த கார் தற்போது குறிப்பிட்ட சில காரணங்களால் விற்பனைக்கு கிடைப்பதில்லை. இருப்பினும், இந்திய சாலைகளில் இக்கார் தற்போதும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

Image Source: Pune Mirror

அந்தவகையில், பயன்பாட்டில் இருந்த ஓர் ஹூண்டாய் ஐ10 காரையே இளைஞர் ஒருவர் சூசகமாக அதன் உரிமையாளருக்கு தெரியமால் திருடிச் சென்றிருக்கின்றார். கார் திருடப்பட்ட வெறும் 40 நிமிடங்களிலேயே போலீஸார் அக்காரை மீட்டு அதன் உரிமையாளரிடத்தில் கொடுத்திருக்கின்றனர்.

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

மேலும், காரை திருடியை இளைஞரையும் காவலர்கள் தற்போது கைது செய்திருக்கின்றனர். கார் திருடப்பட்ட 40 நிமிடங்களிலேயே மீட்கப்பட்டிருப்பது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே போலீஸார் இவ்வளவு விரைவில் காரை கண்டுபிடித்திருக்கின்றனர். கார் இருக்கும் இடத்தை மிக துள்ளியமாக வழங்க உதவும் கருவியே ஜிபிஎஸ். இதனை ஹுண்டாய் ஐ10 கார் பயனர், அக்காரில் பொருத்தியிருக்கின்றனர்.

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

இதை அறியாமல் திருடிச் சென்ற திருடன், மிக குறுகிய நேரத்தில் போலீஸாரின் தேடலில் சிக்கியிருக்கின்றார். இத்தகைய சிறப்பு வசதி ஜிபிஎஸ் கருவியில் இருக்கின்ற காரணத்தினாலயே வாகனத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியைக் கட்டாயம் பொருத்துமாறு அறிவுறுத்துகின்றனர்.

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

இது மிகக் குறைந்த விலையில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கருவியை பொருத்துவதன் வாயிலாக தொலைந்த வாகனம் எங்கு இருக்கின்றது, எந்த பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்ற போன்ற மிக முக்கியமான தகவல்களை நம்மால் அறிந்துக் கொள்ள முடியும்.

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

எனவேதான் தொலைந்த 40 நிமிடங்களில் ஹூண்டாய் ஐ10 காரை போலீஸார் கண்டுபிடித்து அதன் உரிமையாளரிடத்தில் கொடுத்திருக்கின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. திருடை உடனடியாக மடக்கிப்பிடித்ததால் காரில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

குறிப்பாக, கார் இருந்தது இருந்தபடியே மீட்கப்பட்டிருக்கின்றது. புனேவின் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் முஷ்ரஃப் ஷேக். இவருடையதே ஹூண்டாய் ஐ10 கார். இக்காரையே பார்க்கிங்கில் இருந்து அலேக்காகத் தூக்கி சென்றிருக்கின்றார், அபிஷேக் பன்வார் (காரை திருடிய கொள்ளையன்).

திருடப்பட்ட விலையுயர்ந்த கார்... 40 நிமிடங்களிலேயே காரையும், திருடனையும் மடக்கி பிடித்த போலீஸ்... எப்படி தெரியுமா?..

இதை, ஜிபிஎஸ் கருவியின் உதவியால் செல்போன் வாயிலாக அறிந்து கொண்ட முஷ்ரஃப், உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். மேலும், செல்லும் இடத்தை தனது செல்போனில் பார்த்தவாறே போலீஸாரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு சென்று காரை அவர்கள் மடக்கிப்பிடித்தனர். இவ்வாறே திருடப்பட்ட ஹூண்டாய் ஐ10 ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் மீட்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyundai i10 Thief Naped In Just 40 Minutes Thanks To GPS Tracker. Read In Tamil.
Story first published: Saturday, May 22, 2021, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X