ஒரு வழியா இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Hyundai i20 N Line அதி-திறன் கொண்ட கார் ஒரு வழியாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இக்கார்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த Hyundai i20 N Line ஒரு வழியாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் விலை மற்றும் முக்கிய விபரங்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

Hyundai (ஹூண்டாய்) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட i20 N Line (ஐ20 என் லைன்) அதி-திறன் வசதிக் கொண்ட காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனம் என் லைன் வரிசையில் விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் கார் மாடல் இதுவாகும். எனவேதான் இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

இந்த எதிர்பார்ப்பை போக்கும் வகையில் நிறுவனம் தனது ஐ20 என் லைன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இக்காருக்கு நிறுவனம் அறிமுக விலையாக ரூ. 9.84 லட்சம் நிர்ணயித்துள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வில் விற்பனைக்கு வந்திருக்கும் ஐ20 என் லைன் வேரியண்டின் விலை ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

ஐ20 என் லைன் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. N6 மற்றும் N8 ஆகிய இரு விதமான வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும். இதிலேயே கூடுதல் தேர்வு வழங்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் N8 வேரியண்டில் ஐஎம்டி மற்றும் டிசிடி எனும் ஆப்ஷனை வழங்குகின்றது.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

இதில், என்8 ஐஎம்டி ஆப்ஷனுக்கு ரூ. 10.87 லட்சம் என்ற விலையும், என்8 டிசிடி ஆப்ஷனுக்கு ரூ. 11.75 லட்சம் என்ற விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகளே என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் என் லைன் வரிசை கார்கள் அனைத்தும் நிறுவனத்தின் Signature விற்பனையகங்கள் வாயிலாக மட்டுமே விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

எஞ்ஜின்:

1.0 ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் அமைப்பு கொண்ட டர்போசார்ஜட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் ஓர் டைரக்ட் இன்ஜெக்சன் வசதிக் கொண்ட மோட்டாராகும். இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு இன்டெல்லிஜன்ட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிகளும் வழங்கப்பட இருக்கின்றன.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

இதன் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட தேர்வில் பேடில் ஷிஃப்டர்கள் பொருத்தப்பட்ட ஸ்டியரிங் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் ஐஎம்டி தேர்வில் க்ளட்ச் வழங்கப்பட்டிருக்காது. இதுவே இந்த மேனுவல் கியர்பாக்ஸின் சிறப்பு வசதியாகும். ஆகையால் இவையிரண்டும் மிக சிறந்த தேர்வுகளாக காட்சியளிக்கின்றன.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

மெக்கானிக்கல் மாற்றங்கள்:

ஐ20 என் லைன் கார்களில் டிஸ்க் பிரேக் வசதி பின் பக்க வீல்களுக்கு வழங்கப்படுகின்றது. இது மிக சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்க உதவும். இதுமட்டுமின்றி இதன் ஸ்டியரிங் வீல் மற்றும் சஸ்பென்ஷன்கள் அதிக சுலபமானதாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதுவும் மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்க உதவும். குறிப்பாக ஓட்டுநர்களை அவ்வளவு எளிதில் இவை கலைப்படைய செய்யாது.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

காஸ்மெட்டிக் மாற்றங்கள்:

வழக்கமான மாடலைக் காட்டிலும் என் லைன் வரிசையில் விற்பனைக்கு வந்திருக்கும் ஐ20 லேசான கூடுதல் அலங்கரிப்பு வேலைகளை பெற்றிருக்கின்றது. அந்தவகையில், என் லைன் எம்பளங்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காரின் வெளிப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் அவை காட்சியளிக்கின்றன. இத்துடன், ட்வின் டிப் எக்சாஸ்ட், சிவப்பு நிற பிரேக் காலிபர்கள், ரியர் ஸ்பாய்லர், ஸ்போர்ட்டியர் பம்பர் (முன் பக்கத்தில்), சிவப்பு நிற அக்செண்டுகள் மற்றும் 16 இன்சிலான அலாய் வீல்கள் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரு வேலையாக இந்தியாவில் அறிமுகமானது Hyundai i20 N Line! இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்!

உட்பகுதியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள்:

காரின் வெளிப்புற தோற்றத்தைப் போலவே உட்புறத்திலும் சில சிறப்பு அம்சங்கள் சேர்ப்பு பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ஸ்போக் ஸ்டியரிங் வீல், என் லைன் எனும் எழுத்துக்கள், சிவப்பு நிற லைன்கள் மற்றும் ஆம்பிசியன்ட் மின் விளக்குகள் மற்றும் பல தொழில்நுட்ப வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Hyundai i20 n line launched in india at rs 9 84 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X