ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

ஹூண்டாய் அல்கஸார் காருக்கான ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றியும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகளை பற்றியும் இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அல்கஸாரை கடந்த ஜூன் 18ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. விற்பனையில் ஜொலித்துவரும் க்ரெட்டாவின் மூன்று-இருக்கை வரிசை வெர்சனாக கொண்டுவரப்பட்டுள்ள அல்கஸார் மூன்று ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

பிரெஸ்டிஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னெச்சர் என்பவை இந்த மூன்று 3 ட்ரிம்களில் அடங்குகின்றன. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.16.30 லட்சத்தில் இருந்து ரூ.20.14 லட்சம் வரையில் உள்ளன. இந்த நிலையில் தற்போது டார்க், சுப்ரீம், மெஜெஸ்டிக், எலெவேட் என்ற நான்கு ஆக்ஸஸரீ தொகுப்புகள் அல்காஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

இதில் டார்க் தொகுப்பில் 3டி தரைப்பாய்கள் மற்றும் க்ரோம் கதவு-பக்கவாட்டு மோல்டிங் உள்பட ஹெட்லேம்ப், நம்பர் ப்ளேட் & டெயில்லேம்ப் பகுதிகளில் கார்னிஷை பெறலாம். இந்த தொகுப்பின் விலை ரூ.12,715 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டார்க் தொகுப்பில் வழங்கப்படுபவை அனைத்தும் சுப்ரீம் தொகுப்பில் அடங்குகின்றன.

ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

இருப்பினும் இதன் விலை ரூ.30,898 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்ப கூடுதலாக பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பூட் பகுதிக்கான பாய், சைடு ஃபெண்டர் க்ரோம், கதவு விஸர், பின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு சன்ஷேட்கள், ப்ரீமியம் தரத்திலான இருக்கை கவர்கள், கார் வாசனை திரவியம் மற்றும் கார் தலையணையும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

ரூ.24,900 என்ற விலையில் அறிவிக்கப்பட்டுள்ள மெஜெஸ்ட்டிக் தொகுப்பிலும், 3டி தரை பாயை தவிர்த்து டார்க் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளவை அனைத்தும் இடம் பெற்றுள்ளன. இதில் தரைப்பாய் இரட்டை வண்ணங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பூட் பகுதிக்கான தரைப்பாயும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

இவற்றுடன் சுப்ரீம் தொகுப்பில் வழங்கப்படும் சன்ஷேட்கள், கார் வாசனை திரவியம் மற்றும் கார் தலையணையும் மெஜெஸ்டிக் தொகுப்பில் அடங்குகின்றன. ரூ.15,502 என்ற விலையில் கொண்டுவரப்பட்டுள்ள எலெவேட் தொகுப்பில் டார்க் தொகுப்பிலும், மெஜெஸ்டிக் தொகுப்பிலும் வழங்கப்பட்டு உள்ளவையே அங்கம் வகிக்கின்றன.

ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

இவற்றுடன் ஒற்றை யூனிட்களாக காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பொருத்தக்கூடிய ஆக்ஸஸரீ பாகங்களும் அல்கஸாரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றின் விலைகள் ரூ.199ல் இருந்து ரூ.10,999 வரையில் உள்ளன.

Accessories Price
Headlamp garnish ₹919
Fog lamp garnish ₹599
Chrome door side moulding ₹4,999
Black door side moulding ₹1,799
ORVM garnish ₹699
Chrome window beltline ₹2,599
Side fender chrome ₹999
Number plate garnish ₹1,299
Tail lamp garnish ₹2,499
Rear reflector garnish ₹999
Chrome bumper corner garnish ₹1,699
Rear boot garnish ₹1,299
Mud guard ₹199
Door visor ₹1,549
Rear aero diffuser ₹899
Finger guard ₹799
Door edge guard ₹399
Bonnet scoops (dummy) ₹999
Body cover ₹1,599 to ₹3,799
Seat covers ₹8,899 to ₹10,999
Two-tone mat ₹8,999
3D mat ₹2,999
Designer floor mats (all weather) ₹2,799
Floor mats ₹4,999
Designer floor mats ₹1,399 to ₹3,999
All weather mats ₹1,599 to ₹1,999
Boot mat ₹499
3D boot mat ₹899
Rear sill guard ₹1,299
Sunshades ₹1,499 to ₹3,499
Emergency safety kit ₹4,999
Car vacuum cleaner ₹1,999
Mobile charger ₹688
Back seat organiser ₹799
Boot organiser ₹1,652
Tyre inflator ₹3,043
Tyre puncture repair kit ₹299
Seatbelt cover ₹379
Car care kit ₹1,399
Tissue box ₹599
Air purifier ₹5,999
ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

ஹூண்டாய் அல்கஸாரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஹூண்டாய் அல்கஸாருக்கு 4 ஆக்ஸஸரீ தொகுப்புகள் அறிவிப்பு!! கார் வாங்கும்போது இதையும் சேர்த்து வாங்குங்க!

அல்கஸார் காரில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற 3 டிரைவிங் மோட்களும், பனி, மணல் மற்றும் சகதி என 3 ட்ராக்‌ஷன் மோட்களும் உள்ளன. ஹூண்டாய் அல்கஸாருக்கு எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி உள்ளிட்டவற்றுடன் விரைவில் அறிமுகமாகவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 போட்டியாக விளங்கவுள்ளது.

Most Read Articles
English summary
Dark, Supreme, Majestic And Elevate- All The Hyundai Alcazar’s Accessory Packs And Their Prices.
Story first published: Wednesday, June 30, 2021, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X