சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் 'ரேஞ்ச்' குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதிநவீன அம்சங்களுடன் இந்த கார் குறித்த வெளியாகி இருக்கும் இந்த புதிய தகவல் இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் ரேஞ்ச்!

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக இருந்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் வரும் 2028ம் ஆண்டுக்குள் 6 புதிய எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வர இருப்பதாக சில நாட்களுக்கு முன் அரிவித்தது. இது ஹூண்டாய் கார் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக அமைந்துள்ளது.

இந்த 6 புதிய கார் மாடல்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரும் ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

இந்த நிலையில், ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் பேட்டரியானது சிங்கிள் சார்ஜில் எவ்வளவு தூரம் பயணிக்கும் (ரேஞ்ச்) என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் ரேஞ்ச் குறித்து புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறது.

 சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

இதன்படி, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில், கணக்கீடுகளின்படி 488 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இது கணக்கீடுகளின்படி அடிப்படையிலான கணிப்பாக இருந்தாலும், நடைமுறையில் எப்படியும் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனால், இந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் E-GMP என்ற புத்தம் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் வர இருக்கிறது. இதில், ரியர் வீல் டிரைவ் மாடலானது அதிக பயண தூரத்தை வழங்கும் என்று தெரிகிறது.

 சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் 58kWh மற்றும் 72kWh ஆகிய இரண்டுவிதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இதன் சிங்கிள் மோட்டார் மாடலானது 211 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரட்டை மோட்டார்கள் கொண்ட மாடலானது 298 பிஎச்பி பவரையும், 605 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரட்டை மோட்டார்கள் கொண்ட மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 5.2 வினாடிகளில் எட்டிவிடும்.

 சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் 4,635 மிமீ நீளமும், 1,889 மிமீ அகலமும், 1,600 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். 2,999 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், உட்புறத்தில் மிகச்சிறப்பான இடவசதியை வழங்கும்.

 சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

சாதாரண 10.9kW சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணி 43 நிமிடங்கள் பிடிக்கும். இதற்கு வழங்கப்பட உள்ள 350kW ஃபாஸ்ட் ார்ஜர் மூலமாக பேட்டரியை 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் என்ற அளவை வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.

 சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

இந்த மாத இறுதியில் மேலை நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் கடந்த ஆண்டு எக்ஸ்போவிலும், குர்கானில் திறக்கப்பட்டுள்ள ஹூண்டாய் தலைமையகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், சோதனை ஓட்டத்திலும் வைக்கப்பட்டு இருப்பது குறித்த செய்திகளும் வெளியானது.

 சிங்கிள் சார்ஜில் சென்னை டூ பெங்களூர் ஈஸியா கவர் பண்ணலாம்... அசரடிக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரின் 'ரேஞ்ச்'!

இந்த நிலையில், ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கும் 6 புதிய எலெக்ட்ரிக் கார்களில் ஐயோனிக் 5 காரும் ஒன்றாக உறுதியாக நம்பப்படுகிறது. மேலும், ஹூண்டாய் ஐயோனிக் 5 அடிப்படையில் கியா மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கும் இவி6 எலெக்ட்ரிக் காரும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

English summary
Hyundai Ioniq 5 EV Range Details Revealed: expected launch in India soon.
Story first published: Friday, December 10, 2021, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X