ஹூண்டாயின் முதல் என் வரிசை கோனா எஸ்யூவி கார்!! விரைவில் அறிமுகமாகுகிறது...

ஹூண்டாய் கோனா எஸ்யூவி கார் விரைவில் செயல்திறன்மிக்க என் வேரியண்ட்டை பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாயின் முதல் என் வரிசை கோனா எஸ்யூவி கார்!! விரைவில் அறிமுகமாகுகிறது...

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கோனா எஸ்யூவி காரின் அதிக செயல்திறன் என் ரேஞ்ச்சை பெறவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தில் எஸ்யூவி பிரிவில் அறிமுகமாகும் முதல் அதிக-செயல்திறன் எஸ்யூவி காராக கோனா என் மாடல் விளங்கவுள்ளது.

ஹூண்டாயின் முதல் என் வரிசை கோனா எஸ்யூவி கார்!! விரைவில் அறிமுகமாகுகிறது...

இந்த புதிய கோனா கார் குறித்து ஹூண்டாய் மோட்டார் ஐரோப்பாவின் துணை தலைவர் ஆண்ட்ரியோஸ் க்ரிஸ்டோப் ஹாஃப்மேன், வெற்றிக்கான செய்முறையை i30 என் மற்றும் மிக சமீபத்திய i20 என் உடன் இன்று சந்தையில் உள்ள எங்கள் மிகவும் பிரபலமான எஸ்யூவிகளில் ஒன்றை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஹூண்டாயின் முதல் என் வரிசை கோனா எஸ்யூவி கார்!! விரைவில் அறிமுகமாகுகிறது...

என் குடும்பத்தில் கோனா மாடலும் இணைவது அதிக-செயல்திறன் பிராண்டாக ஹூண்டாயை கொண்டு செல்ல்லும் என்றார். புத்தம் புதிய கோனா என் கார் என் டிசிடி என்ற பெயரில் 8-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனை பெறவுள்ளது.

ஹூண்டாயின் முதல் என் வரிசை கோனா எஸ்யூவி கார்!! விரைவில் அறிமுகமாகுகிறது...

ஹூண்டாயின் மற்ற என் வரிசை மாடல்களை போன்று கோனா என் காரிலும் லாஞ்ச் கண்ட்ரோல் போன்ற காரின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய வசதிகள் வழங்கப்படபுள்ளன. ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் என் பிரிவு மேலாண்மையின் துணை தலைவர் வார்டென்பெர்க் பேசுகையில், கோனா என், பிராண்டில் இருந்து வெளிவரும் முதல் ‘ஹாட் எஸ்யூவி' ஆகும்.

ஹூண்டாயின் முதல் என் வரிசை கோனா எஸ்யூவி கார்!! விரைவில் அறிமுகமாகுகிறது...

"சூடான எஸ்யூவி" என்ற வகையில், இது ஏராளமான பன்முகத்தன்மையையும், மற்ற என் வரிசை வாகனங்களை போலவே ஓட்டுநர் இன்பத்தையும் கொண்டிருக்கும்” என கூறினார்.ஹூண்டாய் தனது என் பிராண்ட் வரிசையை இந்த ஆண்டு விரிவாக்க திட்டமிட்டுள்ளது. உயர் செயல்திறன் கொண்ட என் பிராண்டில் ஏற்கனவே ஐ 30 என் மற்றும் ஐ 20 என் போன்ற கார்கள் ஹுண்டாயிடம் உள்ளன.

Most Read Articles

English summary
Hyundai Kona SUV to get high performance N variant soon
Story first published: Wednesday, January 13, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X