பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஹூண்டாய் நிறுவனம் அதிசெயல்திறன் மிக்க கோனா என் கார் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த கார் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் N என்ற பிராண்டில் தனது செயல்திறன் மிக்க கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. சாதாரண கார்களின் அடிப்படையில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் கூடுதல் கவர்ச்சிகர அம்சங்களுடன் என் வரிசையில் ஹூண்டாய் கார்கள் வருகின்றன. இதனால், இந்த கார்களுக்கு பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

அந்த வகையில், கோனா காரின் அடிப்படையில் புதிய பெர்ஃபார்மென்ஸ் மாடலை ஹூண்டாய் உருவாக்கி இருக்கிறது. கோனா என் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மாடல் செயல்திறனில் அசத்தலாக இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஆம், ஹூண்டாய் கோனா என் காரிில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 276 பிஎச்பி பவரையும், 392 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக வர இருக்கிறது. இந்த காரில் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹூண்டாய் கோனா என் காரில் என் பவர் ஷிஃப்ட், என் க்ரின் மற்றும் என் டிராக் சென்ஸ் ஆகிய மூன்றுவிதமான டிரைவிங் மோடுகள் இடம்பெற்றிருக்கும். இது சாலை நிலைகளுக்கு தக்கவாறு ஓட்டுனர் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹூண்டாய் கோனா என் கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. லான்ச் கன்ட்ரோல் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கிறது.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹூண்டாய் கோனா காரின் முகப்பு சாதாரண மாடலைவிட அதிக வசீகரமான அம்சங்களுடன் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரில் மெல்லிய வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூஃப் ஸ்பாய்லர், இரட்டைக் குழல் சைலென்சர் அமைப்பு, சிவப்பு வண்ண அலங்கார விஷயங்கள் அசத்துகின்றன.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் வலிமையானத் தோற்றத்தை தரும் 19 அங்குல அலாய் வீல்கள் மற்றும் லோ புரோஃபைல் டயர்கள் மூலமாக தனித்துவமாகவும், மிரட்டலாகவும் இருக்கிறது. சாதாரண கோனா காரைவிட இதன் டிராக் என்று சொல்லப்படும் சக்கரங்களுக்கு இடையிலான அகலம் கூடுதலாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹூண்டாய் கோனா என் காரின் உட்புறம் முழுமையான கருப்பு வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அல்கான்ட்ரா அப்ஹோல்ஸ்ட்ரி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

பவர்ஃபுல் ஹூண்டாய் கோனா என் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்தியாவில் பெர்ஃபார்மென்ஸ் வகை கார்களுக்கு மெல்ல வரவேற்பு கூடி வருகிறது. குறிப்பிடத்தக்க அளவில் இந்த வரவேற்பு அதிகரித்தலால், தனது என் வரிசை மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தற்போது என் வரிசை மாடல்களை கொண்டு வருவது பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Most Read Articles

English summary
Hyundai Motors has revealed all new Konda N performance SUV.
Story first published: Wednesday, April 28, 2021, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X