எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

எஸ்யூவி, செடான் கார்களுடன் ஒப்பிடும்போது எம்பிவி கார்களின் தோற்றம் பெரிய அளவில் இரசிக்கும்படியாக இருப்பதில்லை என்கிற கருத்து பரவலாக உள்ளது.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

எம்பிவி கார்களின் தோற்றம் மிக பெரியதாக, நீளமானதாக வேன்களை போன்று இருப்பதே இதற்கு காரணமாகும். ஆனால் இங்கு நாம் ஒரு அழகான எம்பிவி காரை பற்றியே பார்க்க போகின்றோம்.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

ஹூண்டாய் ஸ்டாரியா, இந்த ஹூண்டாய் எம்பிவி காரை பார்த்தால் உங்களுக்கு சில டைம் டிராவல் படங்கள் ஞாபகத்திற்கு வரலாம். ஏனென்றால், இதன் தோற்றம் எதிர்காலத்தில், அதாவது 2050, 60களில் சாலைகளில் எந்த மாதிரியான கார்கள் உலா வரும் என்பதை வெளிக்காட்டுவது போல் உள்ளது.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

ஆனால் ஹூண்டாய் ஸ்டாரியா இப்போதே தாய்லாந்து நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸின் தாயகமான தென்கொரியாவில் இருந்து உலகளவில் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது முதல் வெளிநாட்டு சந்தையாக தாய்லாந்தில் ஸ்டாரியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

மிகவும் மாடர்ன் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹூண்டாய் ஸ்டாரியாவின் முன்பக்கம் நேர்த்தியான எல்இடி பார் உடன் மிகவும் எளிமையானதாக உள்ளது. பக்கவாட்டில் ஜன்னல் கண்ணாடிகள் அளவில் பெரியதாக பொருத்தப்பட்டுள்ளன.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

அதேபோல் பின்பக்கத்திலும் கண்ணாடி ஜன்னல் பெரியதாக, அகலமானதாக உள்ளது, முன்பக்கத்தில் மட்டும் தான் வழக்கமான அளவில் வழங்கப்பட்டுள்ளது போல. பின்பக்க கதவு நிமிர்ந்த தோற்றத்திலும், டெயில்லேம்ப்கள் செங்குத்தான வடிவிலும் பொருத்தப்பட்டுள்ளன.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

குறைந்த ஏரோடைனாமிக் இழுவை குணகத்தை மனதில் வைத்து அலாய் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்டாரியாவின் உட்புறத்தில் 10.25 இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்டாகவும் செயல்படும்.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

அழுத்து-பொத்தான் ஸ்டார்ட்-ஸ்டாப் அமைப்பு, 7 யுஎஸ்பி சார்ஜிங் துளைகள், எலக்ட்ரோ-க்ரோமிக் ஐஆர்விஎம், சுற்றிலும் விளக்குகள், பின் ஜன்னல் கண்ணாடியில் சூரிய ஒளியை அனுமதிக்காத திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் தானியங்கி பின் கதவு என இதன் கேபினில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் ஏராளம்.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

ஸ்டாரியாவில் 2.2 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 177 பிஎஸ் மற்றும் 431 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

எம்பிவி கார்கள் அழகாக இருக்காது என்று யார் சொன்னது? ஹூண்டாயின் ஸ்டாரியா எம்பிவி!! தாய்லாந்தில் அறிமுகம்

தாய்லாந்தில் ஹூண்டாய் ஸ்டாரியா எம்பிவி காரின் விலைகள் 1,729,000 THB (ரூ.39.48 லட்சம்)-இல் இருந்து 1,999,000 THB (ரூ.45.65 லட்சம்) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹூண்டாய் ஸ்டாரியா விற்பனைக்கு வருவதற்கு தற்போதைக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

Most Read Articles

English summary
All-New Hyundai Staria Family MPV is Finally Launched In Thailand.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X