க்ரெட்டாவில் புதிய தேர்வை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்... எஸ்எக்ஸ் வேரியண்டைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

ஹூண்டாய் நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் க்ரெட்டா எஸ்யூவி காரில் புதிய தேர்வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டா இருக்கின்றது. இந்த கார் மாடலிலேயே புதிய நடு-நிலை வேரியண்ட் ஒன்றை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் எனும் புதிய ட்ரிம்மையே நிறுவனம் நாட்டில் களமிறக்கியிருக்கின்றது.

க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

இந்த ட்ரிம் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். ஆனால், வேகக்கட்டுப்பாட்டு கருவியை (கியர்பாக்ஸ்) பொருத்த வரை மேனுவல் தேர்வில் மட்டுமே இந்த புதிய ட்ரிம் கிடைக்கின்றது.

க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

க்ரெட்டா எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் எஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆகிய ட்ரிம்களுக்கும் இடையிலான மாடலாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், தற்போது எஸ்எக்ஸ் விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் சற்று குறைந்த விலை மாடலாக அது விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

அதாவது, க்ரெட்டா எஸ்எக்ஸ் ட்ரிம்மைக் காட்டிலும் ரூ. 78 ஆயிரம் குறைவான விலைக் கொண்ட ட்ரிம்மாக புதிய க்ரெட்டா எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் ட்ரிம் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

புதிய ட்ரிம்மின் விலை விபரத்தைக் கீழே காணலாம்.

  • பெட்ரோல்: ரூ. 13.18 லட்சம் (6-speed MT)
  • டீசல்: ரூ. 14.18 லட்சம் (6-speed MT)
  • க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

    எஸ்எக்ஸ் ட்ரிம்மிற்கு கீழ் இடத்தை புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் பிடித்திருப்பதில் இதில் ஒரு சில அம்சங்கள் இல்லாத நிலையை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், 10.25 இன்சிலான தொடு திரை இதில் இல்லாமல் இருப்பது மிக பெரிய அம்ச குறைபாடாக இருக்கின்றது. இதற்கு பதிலாக 8.0 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

    விலைக் குறைப்பு நடவடிக்கைக்காக இதுபோன்று அம்சம குறைப்பாடு வேலையை ஹூண்டாய் கையாண்டுள்ளது. இதனால்தான் எஸ்எக்ஸ் ட்ரிம்மைக் காட்டிலும் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் ட்ரிம் ரூ. 78 ஆயிரம் குறைவான விலைக் கொண்ட காராக களமிறங்கியிருக்கின்றது.

    க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

    அதேசமயம், 10.25 இன்சிலான தொடுதிரையை ப்ளூலிங்க் வசதியுடன் கூடுதல் கட்டணத்திற்கு சில ஹூண்டாய் கார் விற்பனையாளர்கள் வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இது, குரள் கட்டளை போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

    க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

    பனோரமிக் சன்ரூஃப், 17 இன்சிலான அலாய் வீல், ஒயர்லெஸ் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட சில அம்சங்களை வழக்கமான சிறப்பு வசதிகளாக எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் ட்ரிம்மில் ஹூண்டாய் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

    வசதிகள் விஷயத்தில் பிற ட்ரிம்களுடன் எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் மாறுபட்டு காணப்பட்டாலும், எஞ்ஜின் விஷயத்தில் ஒத்துபோகும் மாடலாக இருக்கின்றது. ஆமாங்க, புதிய ட்ரிம் மற்ற ட்ரிம்களைப் போலவே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

    க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

    இதில், பெட்ரோல் எஞ்ஜின் 115 பிஎஸ் மற்றும் 144 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டீசல் எஞ்ஜினானது 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. பெட்ரோல் எஞ்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி தானியங்கி கியர்பாக்ஸ் எனும் இரு தேர்வை ஹூண்டாய் வழங்குகின்றது.

    க்ரெட்டாவில் புதிய எஸ்எக்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்வு அறிமுகம்... எஸ்எக்ஸ் தேர்வைவிட ரூ. 78,000 குறைவான விலையில்!

    இதேபோல், டீசல் எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் எனும் தேர்வை நிறுவனம் வழங்குகின்றது. புதிய ட்ரிம்மில் ஹூண்டாய் அதிக பவர்ஃபுல் எஞ்ஜினான 1.4 லிட்டர் டர்போசார்ஜடு எஞ்ஜின் தேர்வு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Hyundai Launches Creta SX Executive New Trim In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X