பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

2021 ஹூண்டாய் அவ்ரா செடான் காரில் வழங்கப்படவுள்ள வசதிகள் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வரும் வாரங்களில் அதன் அவ்ரா காம்பெக்ட் செடான் காரில் சிறிய அளவிலான அப்டேட்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

இருப்பினும் எந்த மாதிரியான அப்கிரேட்கள் அவ்ராவில் கொண்டுவரப்படவுள்ளன என்பது இதுவரையில் அதிகாரப்பூர்வமாக ஹூண்டாய் தெரிவிக்காத நிலையில் தற்போது அவை டீம் பிஎச்பி செய்திதளத்தின் மூலமாக தெரியவந்துள்ளன.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

இவற்றின்படி பார்க்கும்போது, 2021 ஹூண்டாய் அவ்ரா கார் பின்பக்கத்தில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட ஸ்பாய்லரை பெற்றுவரவுள்ளது. காரின் தோற்றத்தையும் வேகத்தையும் மேம்படுத்தும் வகையில் பின்பக்க ஸ்பாய்லர் அவ்ராவின் எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) வேரியண்ட்களில் வழங்கப்பட உள்ளது.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

அதேநேரம் தற்சமயம் இந்த காம்பெக்ட் செடான் காரின் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வரும் ஆர்காமிஸ் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் காரில் இருந்து நீக்கப்பட உள்ளது.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

விலை குறைவான இ வேரியண்ட்டிற்கு 14 இன்ச்சிற்கு மாற்றாக 13 இன்ச்சில் ஸ்பேர் சக்கரம் வழங்கப்பட உள்ளது. எஸ் வேரியண்ட் இரும்பு சக்கரங்கள் உடனும், ஏஎம்டி மாடல்கள் கன் மெட்டல் நிறத்தில் கிராஃபிக்ஸ் உடனும் விற்பனை செய்யப்பட உள்ளன.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

மற்றப்படி விலைமிக்க எஸ்எக்ஸ்(ஒ) ட்ரிம்-இல் வழக்கம்போல் க்ரூஸ் கண்ட்ரோல் (1.2 லிட்டர் பெட்ரோல் மட்டும்) மற்றும் லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் & கியர் க்னாப் உள்ளிட்டவை தொடரப்பட உள்ளன.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

அதேபோல் 2021 ஹூண்டாய் அவ்ரா காம்பெக்ட் செடான் கார் எப்போதும்போல் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனையை தொடர உள்ளது. மேலும் ஹூண்டாய் கார் சிஎன்ஜி வெர்சனிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

இவற்றில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் இருந்து பகிர்ந்து வழங்கப்படுகிறது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் சிஎன்ஜி தொகுப்புகளுடனும் கிடைக்கிறது.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

மற்றொரு பெட்ரோல் என்ஜின் தேர்வாக அதிகப்பட்சமாக 100பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர், டர்போசார்ஜ்டு என்ஜின் வெறும் மேனுவல் தேர்வில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பெற்றுவரும் 2021 ஹூண்டாய் அவ்ரா செடான்!! விபரங்கள் இணையத்தில் லீக்காகின...

பிஎஸ்6 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஹூண்டாய் அவ்ரா காம்பெக்ட் செடான் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.5.92 லட்சத்தில் இருந்து ரூ.9.30 லட்சம் வரையில் தற்போதைக்கு உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, April 3, 2021, 17:27 [IST]
English summary
2021 Hyundai Aura Features Leaked Ahead of Launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+