குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

Hyundai Casper சிறிய எஸ்யூவி ரக காரின் உலகளாவிய வெளியீடு எப்போது? என்பது பற்றிய தகவல் வெளி வந்திருக்கின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வெளியீடு குறித்த தகவல் கசிந்திருக்கின்றது. இதுகுறித்த மேலும் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

Source: Autocar India

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து காணப்படுகின்றது. அதிலும், குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிறிய மற்றும் காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் சற்று கூடுதல் அதிகமாகவே உள்ளது. எனவேதான், இந்த சந்தையை குறி வைத்து நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றன.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

அந்தவகையில், Hyundai நிறுவனமும் Casper எனும் ஓர் புதுமுக காரை உருவாக்கி வருகின்றது. இது ஓர் சிறிய எஸ்யூவி (Small SUV) ரக காராகும். இக்காரின் இந்திய அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் இக்காரின் அரங்கேற இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

ஆனால், இந்தியாவில் இக்கார் 2022ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. அதேசமயம், இந்திய சந்தைக்கு முன்னதாகவே Hyundai இன் தாய் நாடான தென் கொரியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அங்கு, நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

இந்த அறிமுகத்தை முன்னிட்டே தற்போது Hyundai Casper காரின் உற்பத்தி பணிகளை நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அடுத்த மாதம் உலகளவில் அறிமுகம் செய்வதற்கான பணியிலும் நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது. Hyundai நிறுவனமும் Casper சிறிய எஸ்யூவி ரக காரை முதன் முதலில் ஏஎக்ஸ்1 எனும் பெயரிலேயே காட்சிப்படுத்தியது.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

மிக சிறிய உருவத்தை அது கொண்டிருந்தாலும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும், அன்றைய தினமே பலரின் மனதில் இதன் வருகைகுறித்த ஆர்வத்தைத் தூண்ட தொடங்கிவிட்டது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே உலகளாவிய வெளியீடு குறித்த தகவல் கசிந்திருக்கின்றது. ஆகையால், Hyundai Casper இன் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

Hyundai Casper சிறிய எஸ்யூவி ரக காரில் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. 1.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய இரு மோட்டார் தேர்வுகளிலேயே Casper விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வாயிலாக இத்தகவல் வெளியாகியிருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

அதேசமயம், Grand i10 Nios Turbo மற்றும் Aura Turbo Hyundai ஆகிய கார் மாடல்களிலேயே மேலே பார்த்த எஞ்ஜின் தேர்வுகளே வழங்கப்பட்டு வருகின்றன. ஆகையால், புதிய தயாரிப்பில் மேலே கூறப்பட்ட அதே எஞ்ஜின்களே இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில் இந்தியாவிற்கு வரும் Hyundai Casper காரில் வேறு மாதிரியான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

அந்தவகையில், தற்போது Santro கார்களில் பயன்படுத்தப்படும் 1.1 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்ஜின் Casper இல் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 69 பிஎஸ் மற்றும் 99 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜின் தேர்வும் Casper இல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

Grand i10 Nios மாடலில் இந்த எஞ்ஜினையே Hyundai பயன்படுத்தி வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இவற்றுடன் இந்த எஞ்ஜின்களில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் இன்னும் சில வசதிகளும் இடம் பெறலாம் என யூகிக்கப்படுகின்றது.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

இவை மட்டுமின்றி சிறிய எஸ்யூவி காரை hyundai நிறுவனம் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. 2023ம் ஆண்டிலேயே இதற்கான நடவடிக்கையில் நிறுவனம் களமிறங்க இருக்கின்றது.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

டிசைன் மற்றும் உட்பகுதி:

Hyundai Casper கார், நிறுவனத்தின் K1 எனப்படும் காம்பேக்ட் ரக கார்களை தயாரிக்கும் தளத்தில் கட்டமைக்கப்பட இருக்கின்றது. இதே தளத்தைப் பயன்படுத்தியே Santro மற்றும் Grand i10 Nios ஆகிய கார் மாடல்களை Hyundai தயாரித்து வருகின்றது. ஆகையால், Santro, Grand i10 Nios கார்களை போல் ஓர் கவர்ச்சியான வாகனமாக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

மேலும், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் அடங்கிய 8 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், கார் இணைப்பு தொழில்நுட்பம், சாவியில்லா நுழைவு, எஞ்ஜினை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்யும் பொத்தான் வசதி, ரிவர்ஸ் கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் Casper இல் எதிர்பார்க்கப்படுகின்றன.

குட்டி எஸ்யூவி கார் Hyundai Casper அறிமுகம் எப்போது?.. குறைந்த விலை கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!!

இதுமட்டுமின்றி, காரை கூடுதல் கவர்ச்சியான தயாரிப்பாக காட்டுவதற்காக எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஹெட்லேம்ப், ஹெக்ஸாகன் க்ரில் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக தற்போது விற்பனையில் இருக்கும் Hyundai Venue மினி உருவம் கொண்ட ஓர் தயாரிப்பாக Casper வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் மாதிரி படங்கள் அமைந்திருக்கின்றன. மேலும், இது மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் சந்தையில் களமிறங்கி, அந்த பிரிவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: முதல் இரு படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Hyundai planning to unveil small suv casper on coming next month
Story first published: Monday, August 23, 2021, 10:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X