அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனம் தனது N என்ற பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டில் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் தோற்றத்திலும், செயல்திறனிலும் மிரட்டலாக இருக்கும்.

அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்கும் ஹூண்டாய்!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சாதாரண கார்களின் அடிப்படையில் அதிசக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் கார்களை N என்ற பிராண்டு பெயரில் அறிமுகம் செய்து வருகிறது.

அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்கும் ஹூண்டாய்!

தனது சாதாரண வகை கார்களிலிருந்து இந்த என் பெர்ஃபார்மென்ஸ் கார்களை வேறுபடுத்தும் விதத்தில், விசேஷ அலங்கார அம்சங்கள் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் களமிறக்கி வருகிறது.

அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்கும் ஹூண்டாய்!

இந்த நிலையில், இதே பாணியை பின்பற்றி, அந்நிறுவனம் புதிதாக தயாரிக்கும் எலெக்ட்ரிக் கார்களின் அதிசெயல்திறன் மிக்க மாடல்களை என் பிராண்டில் வெளியிட இருப்பதை உறுதி செய்துள்ளது.

அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்கும் ஹூண்டாய்!

அண்மையில் ஹூண்டாய் கோனா காரின் என் வெர்ஷனை வெளியிட்டது. அப்போது, என் பிராண்டில் எலெக்ட்ரிக் கார்களையும் வழங்க இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்கும் ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார்களை பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் மாடலான ஐயோனிக் 5 என்ற எலெக்ட்ரிக் கார் மாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த கார் என் வெர்ஷனில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்கும் ஹூண்டாய்!

இந்த மிட்சைஸ் ரக க்ராஸ்ஓவர் எஸ்யூவியில் 58kWh மற்றும் 72.6kWh பேட்டரிகள் கொண்ட இரண்டு மாடல்களில் வழங்க இருக்கிறது. மேலும், இவை முறையே ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும். இதன் சக்திவாய்ந்த 72.6kWh மாடலின் பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 306 பிஎஸ் பவரையும், 605 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.2 வினாடிகளில் எட்டிவிடும்.

அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்கும் ஹூண்டாய்!

இந்த காரின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றினால் 18 நிமிடங்களில் முழுமையாக நிரப்பிவிட முடியும். 100 கிமீ தூரம் செல்வதற்கு 5 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் போதுமானது. சர்ரவுண்ட் வியூ மானிட்டர், ரிமோட் பார்க்கிங் அசிஸ்ட், புளூலிங்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்கும் ஹூண்டாய்!

இந்தியாவில் என் வரிசையிலான செயல்திறன் மிக்க கார்களை களமிறக்குவது குறித்து ஹூண்டாய் பரிசீலித்து வருகிறது. எனினும், என் வரிசையிலான எலெக்ட்ரிக் கார்கள் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டாலும், உடனடியாக இந்தியா வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Most Read Articles
English summary
Hyundai is planning to introduce N Line versions of it's electric vehicles based on standard electric cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X