7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

க்ரெட்டா எஸ்யூவியின் அடிப்படையிலான புதிய 7 சீட்டர் எஸ்யூவி எப்படி இருக்கும் என்பதை காட்டும் விதத்தில் ஒரு புதிய வீடியோவை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. இதுவரை யார் கண்ணிலும் காட்டாத இந்த மாடலை முதல்முறையாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக இருந்து வரும் ஹூண்டாய் மோட்டார் இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் மிக வலுவான சந்தையை பெற்றுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் புதிய மாடல்களை களமிறக்கும் திட்டத்தில் உள்ளது. அந்த வகையில், க்ரெட்டா அடிப்படையிலான 7 சீட்டர் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹூண்டாய்.

7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

அல்கஸார் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மாடல் எப்படி இருக்கும் என்பதை இதுவரை காட்டாமல் மிகவும் ரகசியமாக சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது ஹூண்டாய்.

இந்த சூழலில், விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், அல்கஸார் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் விதத்தில் ஒரு வீடியோவை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. அதாவது, அல்கஸார் எஸ்யூவி பல்வேறு சாலை நிலைகள் மற்றும் சூழல்களில் எவ்வளவு தாங்கு திறனை பெற்றிருக்கிறது என்பதை சோதிக்கும் வகையில் இந்த சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

அதில், மறைப்புடன் கூடிய அல்கஸார் எஸ்யூவியை முதல்முறையாக காணும் வாய்ப்பு இந்த எஸ்யூவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கிட்டியுள்ளது. முகப்பில் சில மாற்றங்களுடன் க்ரெட்டாவை ஒத்திருப்பது தெரிய வருகிறது. ஆனால், பக்கவாட்டில் கூடுதல் நீளத்துடன் டி பில்லரில் முக்கிய டிசைன் மாற்றத்தை இந்த எஸ்யூவி சந்தித்துள்ளது.

7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

அதாவது, இது மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட 7 சீட்டர் மாடலாக இருப்பதால், பக்கவாட்டில் க்ரெட்டாவில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. பின்புறத்திலும் டெயில் லைட் டிசைன் உள்ளிட்டவற்றில் மாறுதல்கள் இருக்கும் என்று தெரிகிறது.

7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

எல்இடி டெயில் லைட்டுகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், இரண்டாவது வரிசை இருக்கை அமைப்பில் இரண்டு கேப்டன் இருக்கைகள் ஆகியவை இதில் இடம்பெற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, மூன்று வரிசை இருக்கைகளுடன் 7 சீட்டர் மாடலாக இருப்பதால் அதிக திறன் வாய்ந்த பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த எஞ்சின் எலான்ட்ரா, டூஸான் கார்களில் பயன்படுத்தப்படுகிறது.

7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

இதுதவிர்த்து, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த எஞ்சின்கள் ஏற்கனவே கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களில் பயன்படுத்தப்படுகின்றன.

7 சீட்டர் க்ரெட்டா இப்படித்தான் இருக்கும்... சோதனை ஓட்ட வீடியோவை வெளியிட்டது ஹூண்டாய்!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் விரைவில் வரும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Hyundai has released durability test video of all new Alcazar 7-Seater SUV ahead of launch in India.
Story first published: Monday, April 5, 2021, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X