ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரின் புதிய டிவிசி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

இந்திய சந்தையில் மிக சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட அல்கஸார் 7-இருக்கை எஸ்யூவி காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

விற்பனையில் கோலோச்சி வரும் க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனாக விளங்கும் அல்கஸார் டீசல் & பெட்ரோல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

அல்கஸாரின் வேரியண்ட் வரிசையில் எந்தவொரு ஆரம்ப நிலை வேரியண்ட்டும் இல்லை. இதனால் இந்த எஸ்யூவி காரின் வேரியண்ட்கள் அனைத்தும் தொழிற்நுட்ப அம்சங்களை ஒரே மாதிரியாக அதிகளவில் பெற்றுள்ளன.

இந்த நிலையில் தற்போது அல்கஸாரின் புதிய டிவிசி வீடியோவினை ஹூண்டாய் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளது. பனி நிறைந்த பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வீடியோவின் துவக்கத்தில் குரல் கட்டுப்பாட்டின் மூலம் அல்கஸாரின் பின் கதவு செயல்படுவது காட்டப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

மேலும் இந்த தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவில் அல்கஸாரை இயக்கும் ஓட்டுனர் அதனை பல்வேறு விதமான சாலைகளில் டிராக்‌ஷன் கண்ட்ரோலை பயன்படுத்தி இயக்குவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

6 சிங்கிள்-டோன் & இரு ட்யுல்-டோன் தேர்வுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்கஸாரின் உட்புற கேபின் பழுப்பு, கருப்பு என்ற இரு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி காரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களில் 17 இன்ச்சிலும், டாப் வேரியண்ட்களில் 18 இன்ச்சிலும் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை பெறலாம்.

ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

7-இருக்கை மட்டுமின்றி 6-இருக்கை தேர்விலும் அல்கஸார் காரை வாங்க முடியும். கேப்டன் இருக்கைகள் 6-இருக்கை அல்கஸாரிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வெர்சனில் பிரத்யேகமான மைய கன்சோல் வழங்கப்படும். இரண்டாவது வரிசை இருக்கை பயணிகளுக்கென தனியாக ஏசி துளைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

இவற்றுடன் ஹூண்டாய் நிறுவனம் எளிதாக பயன்படுத்தக்கூடிய அதன் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் அல்கஸாரில் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஹூண்டாயின் ப்ளூலிங்க் இணைப்பு பெற்ற கார் அல்கஸாராகும்.

ஹூண்டாய் அல்கஸாரின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன? விளக்கும் டிவிசி வீடியோ இதோ...!

ஹூண்டாய் அல்கஸாரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 159 பிஎஸ் மற்றும் 191 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles

English summary
Hyundai Alcazar SUV gets a new TVC.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X