முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

குட்டி எஸ்யூவி ரக காராக தயாராகி வரும் Hyundai Casper காரின் படங்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த காரின் படங்களை நிறுவனம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்த முக்கியமான விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

Tata Motors நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் Punch எனும் குட்டியான (மைக்ரோ) எஸ்யூவி ரக கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு நிறுவனம் அவ்வப்போது காரின் முக்கிய விபரங்கள் குறித்த தகவலை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், நேற்றைய தினம் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரக காரின் முழு உருவம் எப்படி இருக்கும் என்பது பற்றிய படங்களை முதல் முறையாக வெளியிட்டது.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

ஏற்கனவே இதன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த இந்தியர்களை இப்படங்கள் மேலும் ஆவலுடன் காத்திருக்க வைக்கும் வகையில் அமைந்தன. இந்த கார் இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவி ரகத்தில் விற்பனையில் இருக்கும் அனைத்து கார்களுக்கும் போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த நிலையில், டாடா பஞ்ச்-ற்கே செம்ம டஃப் கொடுக்கும் வகையில் ஓர் கார் தயாராகிக் கொண்டிருக்கின்றது. Hyundai நிறுவனத்தின் Casper கார் மாடலே அது ஆகும்.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

இதுவும் ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரே டாடாவின் மிக விரைவில் அறிமுகமாக இருக்கும் பஞ்சி-ற்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. நேற்றைய தினம் பஞ்ச் காரின் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது போட்டியாக ஹூண்டாய் கேஸ்பர் காரின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஹூண்டாயின் இந்த செயல் காரின் படத்தை வெளியீடு செய்தது மட்டுமின்றி விற்பனையிலும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

இந்த காரை 2022ம் ஆண்டிற்கு உள்ளாகவே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து இன்னும் ஒரு சில வாரங்களில் இக்காருக்கான முன் பதிவை அதிகாரப்பூர்வ தொடங்க இருக்கின்றது, ஹூண்டாய்.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

ஹூண்டாய் கேஸ்பர் ஓர் குட்டி எஸ்யூவி ரக காராக இருந்தாலும், அது மிகவும் கவர்ச்சியான ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேடியேட்டர் க்ரில், வட்ட வடிவ ஹெட்லைட், புதிய ஸ்டைலிலான ஆர்ச்சுகள் கொண்ட வீல் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் கேஸ்பர் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

முக்கியமாக இந்த காரை நகரவாசிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதனடிப்படையிலேயே மிக சிறிய உருவம், அதிக பயன்பாட்டு வசதிகள் கொண்ட வாகனமாக கேஸ்பர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இக்காரை ஹூண்டாய் நிறுவனம் K1 பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கியிருக்கின்றது. முன்னதாக ஏஎக்ஸ்1 என்ற பெயரில் குறிப்பிட்டு வந்த இக்கார் தற்போது கேஸ்பர் எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாயின் வென்யூ மற்றும் கோனா ஆகிய எஸ்யூவி கார்களைக் காட்டிலும் மிக சிறிய உருவம் கொண்ட காராக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் மற்றும் ரெனால்ட் க்விட் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் சிறிய உருவத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் களமிறக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 1.0 லிட்டர் பன்முனைகள் இன்ஜெக்சன் எஞ்ஜின் மற்றும் டர்போசார்ஜட் வெர்ஷனில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது சர்வதேச சந்தைக்கான எஞ்ஜின் தேர்வுகளாகும்.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

இந்தியாவில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு எஞ்ஜினிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜினிலேயே ஹூண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த எஞ்ஜின் 83 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இக்காரை எதிர்காலத்தில் ஹூண்டாய் நிறுவனம் மலிவு விலை எலெக்ட்ரிக் காராகும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அது 2023ம் ஆண்டிற்கு பின்னரும் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் முறையாக வெளியானது குட்டி எஸ்யூவி Hyundai Casper படங்கள்... Tata Punchக்கு வேற லெவல் போட்டி இருக்கு!

இன்னும் ஹூண்டாய் கேஸ்பர் மைக்ரோ எஸ்யூவி காரின் விலை மற்றும் இன்னும் பல முக்கிய விபரங்கள் வெளியிடப்படாத நிலையே காட்சியளிக்கின்றது. அறிமுகத்தை முன்னிட்டு தற்போது காரின் படங்கள் வெளியிடப்பட்டதைப் போல மிக விரைவில் காரில் இடம் பெற்றிருக்கும் மற்ற சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்த காரும் இந்தியர்களின் எதிர்பார்ப்பில் அதிகளவு ஆக்கிரமிப்பை செய்து வரும் கார் மாடல்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

குறிப்பு: கடைசி நான்கு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Hyundai reveals first time casper micro suv s exterior design
Story first published: Wednesday, September 1, 2021, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X