அசத்தும் அம்சங்களுடன் வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய பிரிமீயம் ரக எம்பிவி கார்... டீசர் வெளியீடு!

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் புதிய பிரிமீயம் வகை எம்பிவி கார் மாடலை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக ஆசிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய எம்பிவி கார் மாடல் குறித்த டீசர் படங்கள், விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹூண்டாய் ஸ்டாரியா 7 சீட்டர் பிரிமீயம் எம்பிவி கார் வெளியீடு!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி கார் சந்தைகளில் பல்வேறு மாடல்களுடன் வலுவான விற்பனையை பல நாடுகளில் தக்க வைத்து வருகிறது. அதேநேரத்தில், எம்பிவி ரக மார்க்கெட்டில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு போதிய சந்தை இல்லாத நிலை உள்ளது.

இதனை மனதில் வைத்து புதிய எம்பிவி வகை கார் மாடல்களை கொண்டு வரும் திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, தனது புதிய பிரிமீயம் வகை எம்பிவி ரக காரின் டீசர் படங்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் ஸ்டாரியா என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய எம்பிவி கார் மாடல் 7 பேர் பயணிக்கும் இருக்கை வசதியை அளிக்கும். மேலும், இது பிரிமீயம் வகை மாடலாக ஆசிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

ஸ்டாரியா என்ற பெயரை பல ஆசிய நாடுகளில் ஹூண்டாய் பதிவு செய்துள்ளது. இந்தியாவிலும் ஸ்டாரியா என்ற பெயரை ஹூண்டாய் பதிவு செய்துள்ளது. எனவே, இந்த கார் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

ஹூண்டாய் ஸ்டாரியா 7 சீட்டர் பிரிமீயம் எம்பிவி கார்

ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, லாவோஸ், மலேசியா மற்றும் கம்போடியா நாடுகளில் இந்த ஸ்டாரியா பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இந்த பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கும் இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய ஸ்டாரியா எம்பிவி காரும் உருவாக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. அதேநேரத்தில், உறுதியானத் தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

ஹூண்டாய் ஸ்டாரியா

பெரிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்ட பட்டை, சதுர வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மிகப்பெரிய ஜன்னல்கள் இடம்பெற்றிருப்பதுடன், உட்புறத்தில் மிகவும் விசாலமான இடவசதியை கொண்ட மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hyundai has revealed first set of teaser images of it's all new Staria MPV car.
Story first published: Thursday, March 11, 2021, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X