மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

மாருதி எஸ் ப்ரெஸ்ஸோ காருக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய காரை தயார் செய்து வருகின்றது ஹூண்டாய் நிறுவனம். இந்த நிலையில், இக்கார்குறித்த டீசர் படங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மிக விரைவில் அல்கஸார் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது ஓர் 7 இருக்கைகள் கொண்ட க்ரெட்டா அடிப்படையிலான எஸ்யூவி ஆகும். இந்த காரின் வரவை இந்திய எஸ்யூவி பிரிவு சந்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் எஸ்யூவி மட்டுமின்றி ஏஎக்ஸ்1 எனும் பெயர் கொண்ட காரையும் இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். ஏஎக்ஸ்1 என்பது குறி பெயர் மட்டுமே ஆகும். ஆகையால், இது விற்பனைக்கு வரும்போது வேறு பெயரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

இக்காரை இந்தியாவில் தற்போது மிக சிறந்த விற்பனையைப் பெற்று வரும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ காருக்கு போட்டியாக களமிறக்க திட்டமிட்டுள்ளது, ஹூண்டாய். இத்திட்டத்தைத் தொடர்ந்து தற்போது ஏஎக்ஸ்1 கார்குறித்த டீசர் படங்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

இது ஏஎக்ஸ்1 மீது பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. முதலில் இக்கார் தென் கொரியாவிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நாட்டில் ஏஎக்ஸ்1 தீவிர பல பரீட்சையில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கார்குறித்த டீசர் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

தற்போது வெளியாகியிருக்கும் டீசர் படங்கள், ஏஎக்ஸ்1 காரில் இடம் பெற இருக்கும் ஹெட்லேம்ப் மற்றும் பின்பக்க சிவப்பு மின் விளக்கு ஆகியவை என்ன மாதிரியான ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

இவ்விரு உடற்பகுதியை வெளிக்காட்டக் கூடிய டீசர் படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஹூண்டாய் ஏஎக்ஸ்1 மைக்ரோ எஸ்யூவி இளைஞர்களைக் கவரக் கூடிய ஸ்டைலில் உருவாகியிருப்பதையும் இந்த படங்கள் வெளிக்காட்டுகின்றன.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டும் சேன்ட்ரோ காருக்கு கிடைக்கும் வரவேற்பு குறைந்திருப்பதைக் கருத்தில் கொண்டும் மிக விரைவில் ஏஎக்ஸ்1 எஸ்யூவி காரை இந்தியாவில் களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டிருக்கின்றது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

ஹூண்டாய் ஏஎக்ஸ்1 காரில் இரு விதமான பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு எதிர்பார்க்கப்படுகின்றது. 1.1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், 1.1 லிட்டர் எஞ்ஜினானது 69 பிஎஸ் மற்றும் 99 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

மாருதி எஸ் பிரஸ்ஸோ காரை ஓரம் கட்ட ஹூண்டாய் திட்டம்... புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் டீசர் படங்கள் வெளியீடு!!

இதேபோன்று, 1.2 லிட்டர் எஞ்ஜினானது 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் வசதிகள் கொண்ட ஹூண்டாய் ஏஎக்ஸ்1 இந்தியாவில் விற்பனைக்கு வருமானால் மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ காருக்கு மட்டுமின்றி மஹிந்திரா கேயூவி 100 மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வரவுள்ள சிசி21 மற்றும் டாடா எச்பிஎக்ஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும்.

குறிப்பு: 2வது படத்தை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. இதுவும், ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றுமொரு எதிர்கால தயாரிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hyundai Reveals Upcoming AX1 Micro SUV Teaser Pics Officially. Read In Tamil.
Story first published: Wednesday, May 5, 2021, 10:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X