Just In
- 7 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 12 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதளபாதாளத்திற்கு சென்ற ஹூண்டாய் சேன்ட்ரோ கார் விற்பனை... சொன்னா நம்ப மாட்டீங்க மிக குறைவான விற்பனை!
ஹூண்டாய் சேன்ட்ரோ காரின் விற்பனை அதளபாதாளத்திற்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் சேன்ட்ரோ-வும் ஒன்று. இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்த இக்கார் தற்போது விற்பனையில் மிக மோசமானநிலையைச் சந்தித்து வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், சேன்ட்ரோவின் விற்பனை அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கின்றது.

கடந்த காலங்களில் விற்பனையில் கொடிக் கட்டிப் பறந்த இக்காருக்கு தற்போது போட்டி அதிகரித்து காணப்படுகின்றது. இதன் விளைவாக மிகக் கடுமையான விற்பனை வீழ்ச்சியை சேன்ட்ரோ சந்தித்து வருகின்றது. சேன்ட்ரோவின் இடத்தைக் காலி செய்கின்ற வகையில் டாடா டியாகோ (அதிக பாதுகாப்பானது), ரெனால்ட் க்விட் உள்ளிட்டவை விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்ற போட்டிகளைச் சமாளிப்பதற்காக சிஎன்ஜி தேர்வுடன் சேர்த்து நான்கு விதமான வேரியண்டுகளில் சேன்ட்ரோ மாடலை ஹூண்டாய் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இருப்பினும், மக்களின் கவனம் புதிய வாகனங்களின் பக்கம் திசை திரும்பியிருப்பதால் சேன்ட்ரோவால் விற்பனையில் வெற்றி பெற முடியவில்லை.

இக்காரின் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை பல மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது. 29 சதவீத விற்பனை வளர்ச்சியை ஹூண்டாய் சந்தித்திருக்கின்றது. இது மாபெறும் வளர்ச்சியாகும். கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இத்தகைய பிரமாண்ட விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருக்கின்றது.

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், ஹூண்டாய் நிறுவனம் 2020 பிப்ரவரியில் 40,010 யூனிட் வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. ஆனால், 2021 பிப்ரவரியில் 51,600 யூனிட்டுகளாக விற்பனை வளர்ச்சியடைந்து இருக்கின்றது. இதில், சேன்ட்ரோ மாடலைப் போல கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் அவுரா ஆகிய ஹூண்டாய் தயாரிப்புகளும் விற்பனைச் சரிவைச் சந்திருக்கின்றன.

கிராண்ட் ஐ10 நியாஸ் 1 சதவீத விற்பனைச் சரிவையும், அவுரா 13 சதவீத சரிவையும் சந்தித்திருக்கின்றது. இதில், சேன்ட்ரோ கார் மட்டுமே மிக பெரிய விற்பனை வீழ்ச்சியாக 49 சதவீதம் சரிவைச் சந்தித்திருக்கின்றது. 2020 பிப்ரவரியில் 4,200 யூனிட்டாக விற்பனை எண்ணிக்கை, 2021 பாதியளவில் சரிந்து 2,128 யூனிட்டுகளாக சரிந்திருக்கின்றது. இச்சரிவு ஹூண்டாய் நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போது ரூ. 4.68 லட்சம் தொடங்கி ரூ. 6.36 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹூண்டாய் சேன்ட்ரோ கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. 1.1 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினில் கிடைக்கும் சேன்ட்ரோ 68 பிஎச்பியை 5,500 ஆர்பிஎம்மிலும், 99 என்எம் டார்க்கை 4,500 ஆர்பிஎம்மிலும் வெளியற்றும் திறன் கொண்டது.

இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைத்தொடர்ந்து, சிஎன்ஜி கிட் தேர்விலும் சேன்ட்ரோ வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தேர்வில் கிடைக்கும் சேன்ட்ரோ 58 பிஎச்பி மற்றும் 84 என்எம் டார்க்கை வெளியேற்றும்.