2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

2022 ஹூண்டாய் கோனா என் காரின் புதிய டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கோனா ஃபேஸ்லிஃப்ட் காரை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து கோனாவின் ‘என்' வெர்சன் காரையும் விரைவில் வெளியிட இந்த நிறுவனம் தயாராகி வருகிறது.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

இந்த எஸ்யூவி காரின் உலகளாவிய அறிமுகம் குறித்த விபரங்களை ஹூண்டாய் நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை என்றாலும், தற்போது காரின் முழு தோற்றத்தை வெளிக்காட்டக்கூடிய டீசர் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதால், கோனா என் வெர்சன் கார் அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம்.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

இந்த டீசர் படங்களில் கோனா என் கார் முன்பக்கத்தில் ‘என்' முத்திரை உடன் ஸ்போர்டியரான க்ரில் டிசைனை கொண்டுள்ளது. வழக்கமான கோனா காரை போல் அல்லாமல் இந்த செயல்திறன்மிக்க காரில் இருபுறங்களிலும் காற்று ஏற்பான்கள் உடன் ஏர் டேம் முழுமையாக திறந்த நிலையில் காட்சியளிக்கிறது.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

ஸ்போர்டியான தோற்றத்திற்கு முன்பக்க பம்பரின் அடிப்பகுதியில் ஸ்பிளிட்டர் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் பக்கவாட்டு பகுதிகளுக்கும் தொடரப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்களின் டிசைன் வழக்கம்போல் எல்இடி டிஆர்எல்களுடன் கிடைமட்ட வடிவத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

இவற்றுடன் பொனெட்டிலும் கூடுதல் காற்று ஏற்பான்களை பார்க்க முடிகிறது. இவை தான் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன. அலாய் சக்கரங்களின் டிசைன் வித்தியாசமாக உள்ளது. பின்பக்கத்தில் முக்கோண வடிவிலான நிறுத்து-விளக்கு உடன் பெரிய அளவிலான ஸ்பாய்லரை மேற்கூரையில் பார்க்க முடிகிறது.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

முன்பக்கத்தை போல் பின்பக்க பம்பரும் சிவப்பு நிற தொடுதல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட டிஃப்யூஸரை கொண்டுள்ளது. பெரிய அளவிலான இரு எக்ஸாஸ்ட் குழாய்கள் தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ளன. கருப்பு நிறத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதற்கான தண்டவாளங்கள் வழங்கப்பட்டிருப்பது போல் தான் தெரிகிறது.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

மற்றப்படி காரின் உட்புறத்தை காட்டும் படங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்தவரை வழக்கமான கோனா காரில் இருந்து ஹேண்ட்லிங்கை மேம்படுத்தும் விதமாக காரின் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டேரிங் சக்கரத்தை ஹூண்டாய் நிறுவனம் அப்கிரேட் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

2022 ஹூண்டாய் கோனா என் காரில் அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 272 எச்பி மற்றும் 353 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

2022 ஹூண்டாய் கோனா என் காரின் டீசர் படங்கள் வெளியீடு!! புதிய அப்கிரேட்கள் என்னென்ன தெரியுமா?

முன்சக்கர ட்ரைவ் மற்றும் அனைத்துசக்கர ட்ரைவ் தேர்வுகளுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படலாம். இந்தியாவில் ஹூண்டாயின் செயல்திறன்மிக்க என் வரிசை கார்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதால், கோனா என் காரும் நம் நாட்டு ஷோரூம்களுக்கு கொண்டுவரப்பட வாய்ப்பில்லை.

Most Read Articles

English summary
2022 Hyundai Kona N Revealed Almost Completely In Latest Teaser Images.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X