ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

Hyundai நிறுவனம் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

Hyundai நிறுவனத்தின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் வரும் 2023ம் ஆண்டு முதல் தொடங்கவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான Electric Powertrain-னை அமெரிக்காவை சேர்ந்த BorgWarner நிறுவனம் சப்ளை செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் Hyundai நிறுவனம் வெகு சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

இந்த செய்தியை BorgWarner நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் Hyundai நிறுவனம் புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவிருக்கும் தகவலும் வெளியாகியுள்ளது. Hyundai நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார், Compact Car-ஆக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவான வகையில் இருக்கும் என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

தினசரி பயன்பாட்டிற்கு எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த எலெக்ட்ரிக் கார் டிசைன் செய்யப்படவுள்ளது. இதனை மனதில் வைத்துதான் BorgWarner நிறுவனத்திடம் இருந்து இந்த எலெக்ட்ரிக் காருக்கான Electric Powertrain-னை Hyundai நிறுவனம் பெறவுள்ளது. இது வழக்கமான Electric Powertrain-னை காட்டிலும் வித்தியாசமாக இருக்கும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

இந்த புத்திசாலிதனமான வடிவமைப்பின் மூலம் எடை குறைப்பு உள்பட பல்வேறு சாதகங்களை பெற முடியும். Hyundai நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் 3.5 முதல் 3.7 மீட்டர் வரையிலான நீளம் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Hyundai நிறுவனம் ஏற்கனவே Kona எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

சர்வதேச சந்தைகளில் 64kW பேட்டரி தொகுப்புடன் Hyundai Kona எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்திய சந்தையில் 39.2kW பேட்டரி தொகுப்புடன் Hyundai Kona எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 39.2kW பேட்டரி தொகுப்புதான் Hyundai நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

இது Compact Car என்பதால், அதனை மனதில் வைத்து, பெரிய பேட்டரி தொகுப்பிற்கு பதிலாக சிறிய பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் Hyundai Kona எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 452 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

இது அராய் நிறுவனம் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். அதே சமயம் Hyundai நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

எனினும் நடைமுறை பயன்பாட்டில் இந்த காரின் ரேஞ்ச் குறைந்தபட்சம் 350 கிலோ மீட்டர்களாவது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வகையிலும் பார்த்தாலும், இது அருமையான ரேஞ்ச்தான். ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரை Hyundai நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

இருந்தாலும் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனே இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு முதல் முறையாக எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனங்களில் Hyundai நிறுவனமும் ஒன்று.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

அத்துடன் இந்திய சந்தையில் முதல் இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் Hyundai நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, Hyundai நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றுதான் நம்பப்படுகிறது. இதனை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ ஓடும்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்கிறது Hyundai

Hyundai நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் சர்வதேச மற்றும் இந்திய சந்தைகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டில், Hyundai நிறுவனம் தன்னை வலிமையாக நிலைநிறுத்தி கொள்ளவும் இது உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hyundai small electric car production to start in 2023 here are all the details
Story first published: Friday, August 27, 2021, 16:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X