ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல!

ஹூண்டாய் ஸ்டாரியா (Hyundai Staria) மிகவும் அழகிய கார் மட்டுமல்ல அதிக பாதுகாப்பானது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக ஸ்டாரியா (Staria) எம்பிவி கார் இருக்கின்றது. "எம்பிவி கார்கள் எல்லாம் பெருசா அழகா இருக்காதுங்க" என்று கூறப்பட்டு வரும் நெடுங்கால கருத்துகளை உடைத்தெறியும் வகையில் இக்காரை மிகவும் அழகான வாகனமாக ஹூண்டாய் உருவாக்கியிருக்கின்றது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

இந்த வாகனமே தான் ஓர் அழகிய வாகனம் மட்டுமல்ல மிகுந்த பாதுகாப்பான வாகனமும்கூட என்பதை நிரூபித்திருக்கின்றது. ஆஸ்திரேலியன் என்சிஏபி (Australian NCAP) அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு 5 ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்று இந்த புகழை ஸ்டாரியா சூடியிருக்கின்றது. இதன் வாயிலாக தனது தயாரிப்பாளருக்கு பெருத்த புகழையும் அது பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

ஸ்டாரியா மற்றும் ஸ்டாரியா லோட் என இரு விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஸ்டாரியா பயணிகளுக்காக தேர்வாகவும், ஸ்டாரியா லோடு சரக்கு வாகனமாகவும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இவையிரண்டுமே தற்போது செய்யப்பட்ட மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

மேலும், ஆஸ்திரேலியா என்சிஏபி-யின் மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டாரைப் பெற்ற முதல் பயணிகள் காராக ஸ்டாரியா மாறியிருக்கின்றது. கியா கார்னிவல் மற்றும் புதிய அறிமுகமான ஃபோக்ஸ்வேகன் கேடி ஆகிய கார்களை ஏஎன்சிஏபி அண்மையில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

இவற்றைக் காட்டிலும் அதிக பாதுகாப்பான வாகனம் என்ற புகழையே தற்போது ஸ்டாரியா பெற்றிருக்கின்றது. ஏஎன்சிஏபி 2020-2022ம் ஆண்டிற்கான தனது விதிமுறைகளை மிகக் கடுமையானதாக மாற்றியிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ஸ்டாரியா தற்போது மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

இப்படியான சூழ்நிலையில் ஸ்டாரியா ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் மிகுந்த பாதுகாப்பை வழங்கும் காராக ஸ்டாரியா இருக்கின்றது. பெரியவர்களின் பாதுகாப்பில் 85 சதவீத புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 85 சதவீத புள்ளிகளையும் ஹூண்டாய் ஸ்டாரியா பெற்றிருக்கின்றது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

இவ்வாறு இக்கார் உட்படுத்தப்பட்ட அனைத்து சோதனைகளிலும் மிக அதிக புள்ளிகளையே பெற்றிருக்கின்றது. இதற்கு அக்காரில் இடம் பெற்றிருக்கும் பாதுகாப்பு கருவிகள் மற்றும் அம்சங்களே மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது. ஹூண்டாய் ஸ்டாரியாவில் எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

ஸ்மார்ட் சென்ஸின்கீழ், ஃபார்வார்டு கொல்லிசன் தவிர்ப்பு, லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் கொள்ளிசன் தவிர்ப்பு அம்சம், பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு உதவும் வழிகாட்டி, ஸ்மார்ட் க்ரூஸ கன்ட்ரோல், லேன் ஃபாளோவிங் அசிஸ்டம், மும்முனை சீட் பெல்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் திரைபோன்ற ஏர் பேக்குகள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய அதிக பாதுகாப்பு திறன் கொண்ட ஸ்டாரியா எம்பிவி காரை ஹூண்டாய் நிறுவனம் உலகின் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

ஸ்டாரியா அதிக பாதுகாப்பான கார் மட்டுமல்ல மிக அதிக சிறப்பு தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட வாகனமும் கூட. இக்காரில் 10.25 இன்சிலான இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமாகவும் செயல்படுகின்றது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

இத்துடன், புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், 7 யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகள், பின் ஜன்னல் கண்ணாடியில் சூரிய ஒளியை அனுமதிக்காத திரை, ஆம்பிசியன் மின் விளக்கு, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் தானியங்கி பின் கதவு என பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

அண்மையில் லத்தீன் என்சிஏபி ஹூண்டாய் டக்சன் காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த கார் க்ராஷ் ஆய்வில் பூஜ்ஜியம் ஸ்டார்களைப் பெற்று பாதுகாப்பான பயணங்களுக்கு துளியும் உகந்த வாகனம் அல்ல என்ற ரேட்டிங்கைப் பெற்றது. அதேநேரத்தில், முன்னதாக யூரோ என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இக்கார் மாடல் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெற்று நிறுவனத்திற்கு புகழைச் சேர்ந்தது.

ரொம்ப அழகான கார் மட்டும்தான் நினைச்சோம்... பாதுகாப்புல இரும்பு பெட்டகத்தையே மிஞ்சிடும் போல...

இதில், லத்தீன் என்சிஏபி அமைப்பு பயன்படுத்தியது 2021 டக்சன் ஆகும். ஆனால் யூரோ என்சிஏபி பயன்படுத்தியதோ புதிய வெர்ஷன் டக்சன் ஆகும். ஆகையால், பழைய வெர்ஷனைக் காட்டிலும் புதிய வெர்ஷன் டக்சன் அதிக பாதுகாப்பானது என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேநேரத்தில், பழைய 2021 வெர்ஷனே தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

Most Read Articles

English summary
Hyundai staria mpv gets five star safety rating at ancap
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X