தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

2022 எலண்ட்ரா என் செயல்திறன் காரின் புதிய டீசர் படங்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றின் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹூண்டாய் நிறுவனம் அதன் எலண்ட்ரா செடான் மாடலின் புதிய செயல்திறன்மிக்க வெர்சனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

எலண்ட்ரா என் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த கார் ஹூண்டாயின் செயல்திறன்மிக்க என் வரிசையில் இடம்பெறும் ஆறாவது மாடலாக விளங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்களில் எலண்ட்ரா என் காரின் பின்பக்கத்தையும், பக்கவாட்டின் அடிப்பகுதியையும் பார்க்க முடிகிறது.

தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

மேலும் இந்த டீசர்களின் மூலமாக இந்த செயல்திறன் காரின் ஸ்டைலிஷான எல்இடி டெயில்லைட் மற்றும் சிவப்பு ப்ரேக் காலிபர்களை கொண்ட, அளவில் பெரியதான சக்கரங்களும் நமது கண்களுக்கு விருந்தாகியுள்ளன. தென் கொரியாவில் எலண்ட்ரா அவெண்டே என்கிற பெயரில் விற்பனையாகுவதால், இந்த கார் அவெண்டே என் என்ற பெயரிலேயே அங்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

கடந்த ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட முற்றிலும்-புதிய எலண்ட்ராவின் அடிப்படையில் உருவாக்கப்படும் 2022 எலண்ட்ரா என் காரில், நிச்சயம் மற்ற ஹூண்டாய் என் வரிசை கார்களின் ஸ்டைலிங் பாகங்களை எதிர்பார்க்கலாம். இந்த வகையில் "என்" லோகோக்கள் காரை சுற்றிலும் கொடுக்கப்படும்.

தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

இந்த டீசர் படங்களில் கூட சக்கரங்களின் மத்தியில் என் முத்திரையை பார்க்கலாம். மேலும் இந்த டீசர் படங்களில் சிவப்பு நிற பக்கவாட்டு சில்ஸையும் காரில் பார்க்க முடிகிறது. இது தாழ்வான சேசிஸிற்கு வழிவகுக்கும். அதேபோல் காரின் காற்று இயக்கவியல் பண்பை மேம்படுத்தும் விதத்தில் ஸ்பாய்லரையும் இந்த டீசரில் எலண்ட்ரா என் காரின் பின்பக்கத்தில் காண முடிகிறது.

தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

காரில் எக்ஸாஸ்ட் குழாய் ஒன்று மட்டுமே காட்சியளிக்கிறது. ஆனால் மறுமுனையிலும் எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்படும். ஸ்டாண்டர்ட் எலண்ட்ராவுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் வித்தியாசமானதாக விளங்கவுள்ளது.

தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

மற்றப்படி எலண்ட்ரா என் காரின் என்ஜின் மற்றும் செயல்திறன் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. சர்வதேச சந்தையில் ஹூண்டாய் எலண்ட்ரா என் காருக்கு ஹோண்டா சிவிக் டைப் ஆர் கார் முக்கிய போட்டியாக விளங்கும்.

தயாராகிறது 2022 ஹூண்டாய் எலண்ட்ரா என்...!! ஹோண்டா சிவிக் டைப் ஆர்-க்கு போட்டியாக வருகிறது!

எலண்ட்ரா மாடலின் செயல்திறன்மிக்க வெர்சனான எலண்ட்ரா என்-இன் மூலம் எலண்ட்ரா செடானின் ஸ்போர்டியர் பக்கத்தை நாங்கள் வெளிகாட்டவுள்ளோம். இதனை முழு ஸ்போர்ட்ஸ் காராக நாங்கள் வடிவமைத்துள்ளோம். நிச்சயம் எலண்ட்ரா என் கார் பந்தய ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் என ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் என் பிராண்ட் நிர்வாகத்தின் துணை தலைவரான டில் வார்டன்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Hyundai teases 2022 Elantra N performance model, rival to Honda Civic Type R.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X