பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த விளையாட்டு வீரரின் கார்... அந்தரத்தில் தொங்கிய ஷாக் நிகழ்வு!!

பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் கட்டிடத்திற்கு வெளியே வந்து நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த விளையாட்டு வீரரின் கார்... அந்தரத்தில் தொங்கிய ஷாக் நிகழ்வு!!

போர்ஷே நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்களில் மஸான் மாடலும் ஒன்று. இந்த காரையே இளைஞர் ஒருவர் கொக்கி மற்றும் கயிறுகள் ஏதுமின்றி அந்தரத்தில் தொங்கவிட்டிருக்கின்றார். அந்த இளைஞர் வேறு யாருமில்லைங்க ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பிரபல ஐஸ் ஹாக்கி விளையாட்டு வீரரான டெனிஸ் காஸியோநவ் (Denis Kazionov) என்பவர்தான் அவர்.

பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த விளையாட்டு வீரரின் கார்... அந்தரத்தில் தொங்கிய ஷாக் நிகழ்வு!!

இவருக்கே இந்த அவல நிலை உருவாகியிருக்கின்றது. மனைவி மற்றும் மகனுடன் ஷாப்பிங்கிற்காக வந்தபோதே இந்த விபரீத நிகழ்வு அவருக்கு நேர்ந்திருருக்கின்றது. கார் முன்னிருக்கையில் டெனிஸும், அவரது மனைவியும் அமர்ந்திருக்க, மகனை பின்னால் சீட் பெல்ட் அணிவித்தவாறு உட்கார வைத்திருக்கின்றனர்.

பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த விளையாட்டு வீரரின் கார்... அந்தரத்தில் தொங்கிய ஷாக் நிகழ்வு!!

பல அடுக்கு மாடிகள்கொண்ட பார்க்கிங்கில் காரை பார்க் செய்யவும் அவர் சென்றிருக்கின்றார். அவ்வாறு மூன்றாம் தளத்தில் காரை பார்க் செய்யும்விதமாக நகர்த்திக் கொண்டிருந்தபோதே, திடீரென போர்ஷே மஸான் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றது. இதனால், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கார் வெளியேற ஆரம்பித்தது.

பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த விளையாட்டு வீரரின் கார்... அந்தரத்தில் தொங்கிய ஷாக் நிகழ்வு!!

அந்த பகுதியில் உலோக தடுப்பு கம்பிகள் இருந்ததாலும், உடனடியாக சுதாரித்த டெனிஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்பட்டு காரை நிறுத்தியதாலும் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் காரின் முன்பக்கம் மட்டும் வெளியே வந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவொரு தீங்கும் நேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த விளையாட்டு வீரரின் கார்... அந்தரத்தில் தொங்கிய ஷாக் நிகழ்வு!!

இச்சம்பவம் குறித்து சமூக வலை தளத்தில் பதிவிட்ட டெனிஸ், "நான் பிரேக்கை அழுத்தினேன், இருப்பினும் கார் நிற்கவில்லை. அது தொடர்ச்சியாக நகர்ந்தது. இதனால் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு காரின் முன்பக்கம் வெளியேறியது. நாங்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினோம்" என்றார்.

பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த விளையாட்டு வீரரின் கார்... அந்தரத்தில் தொங்கிய ஷாக் நிகழ்வு!!

இச்சம்பவம்குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியிருக்கின்றன. முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றொரு வாகனத்தைக் கொண்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விலையுயர்ந்த போர்ஷே மஸான் சொகுசு காரை வெளியேற்றினர்.

பார்க்கிங் செய்யும்போது கட்டுப்பாட்டை இழந்த விளையாட்டு வீரரின் கார்... அந்தரத்தில் தொங்கிய ஷாக் நிகழ்வு!!

போர்ஷே மஸான் கார் இந்தியாவில் ரூ. 69.98 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 83.95 லட்சம் ஆகும். இரு விதமான வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார் அதிகபட்சமாக 180கிலோவாட் மற்றும் 245பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 225 கிமீ ஆகும். அதேசமயம், இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 6.7 செகண்டுகளியே எட்டி விடும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த திறனை 2.9 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்ஜினே வெளியேற்றுகின்றது. வெளிநாடுகளில் இக்கார் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ice Hockey Player Denis Kazionov Lost Control While Trying To Park; Here Is What Happen. Read In Tamil.
Story first published: Saturday, March 13, 2021, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X