2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

நடப்பு 2021ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த புதுமுக கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் சிறப்பு தொகுப்பாக வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

நடப்பு 2021ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த ஆண்டின் முதல் பகுதி லாக்டவுண், வைரஸ் பரவல் என இக்கட்டான சூழ்நிலை உடனே கடந்தது. இருப்பினும், இந்த கால கட்டத்திலும் சில முன்னணி நிறுவனங்கள் அதன் புதுமுக கார்களை களமிறக்கி இந்திய வாகன சந்தையை அழகுபடுத்தின.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

அந்தவகையில், 2021ம் ஆண்டில் இந்திய சந்தையை அலங்கரிக்கும் வகையில் களமிறங்கிய பத்து கார்களை பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். நாம் பார்க்க இருக்கும் 10 கார் மாடல்களும் இந்தியர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வந்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

எம்ஜி ஆஸ்டர் (MG Astor)

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் மற்றும் தன்னாட்சி (நிலை 2) தொழில்நுட்பம் கொண்ட கார் இதுவாகும். இந்த அம்சங்களுடன் ரூ. 9.78 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தொழில்நுட்ப அம்சத்தில் மட்டுமில்லைங்க, இந்த கார் எக்கசக்க பிரீமியம் தர சிறப்பு வசதிகளையும் பெற்றிருக்கின்றது. எனவேதான் இக்காருக்கு எதிர்பார்ப்பு பல மடங்கு நீடித்துக் காணப்பட்டது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

எம்ஜி அஸ்டர் இந்திாயவில் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி என 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. நெடுஞ்சாலைகளில் முன்-பின் வரும் வாகனங்களை அறிந்து முன் கூட்டியே வேகத்தை கட்டுப்படுத்தும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், முன்பக்க மோதல் குறித்து எச்சரிக்கும் வசதி, தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் பிரிவன்ஷன் மற்றும் ஸ்பீடு அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700)

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு தர்போது இந்தியாவில் மிக அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. இக்காருக்கு புக்கிங் தொடங்கப்பட்ட மிக விரைவிலேயே 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன்பதிவுகள் கிடைத்தன. இரண்டே நாட்களில் இவை அனைத்தும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 5 மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வும் வழங்கப்படுகின்றது. இக்காரின் டெலிவரி பணிகளை தற்போது மஹிந்திரா மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே பெட்ரோல் தேர்வின் டெலிவரிகள் தொடங்கிய நிலையில் மிக சமீபத்தில் டீசல் வேரியண்ட் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டன. இந்த காரில் கூடுதல் தேர்வாக அனைத்து வீல்கள் இயக்கம் வழங்கப்பட்டு வருகின்றது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

10.25 இன்சிலான இரு திரைகள், அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள் (ADAS), 3டி சவுண்ட் அவுட்புட் கொண்ட 12 ஸ்பீக்கர்கள் (சோனி சிஸ்டம்), எலக்ட்ரிக் வாயிலாக 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் முழு-டிஜிட்டல் ஓட்டுனர் திரை உள்ளிட்ட அம்சங்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 வழங்கப்பட்டுள்ளன. ரூ. 12.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

மாருதி சுசுகி செலிரியோ (Maruti Celerio)

இந்தியாவின் மிக அதிக மைலேஜ் தரும் காராக மாருதி சுசுகி செலிரியோ விளங்குகின்றது. மிக சமீபத்திலேயே இந்த புதிய தலைமுறையை மாருதி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 26.68 கிமீ வரை மைலேஜ் தரும். இதில், ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி கே செரீஸ் எஞ்ஜினை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், எரிபொருள் சேமிப்பை வழங்கும் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

டாடா பஞ்ச் (Tata Punch)

டாடா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் ஒன்றாக இந்த பஞ்ச் இருக்கின்றது. இந்த கார் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற மாடல் ஆகும். இத்துடன், அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் மற்றும் அதிக இட வசதிக் கொண்ட வாகனமாகவும் இந்தியா வந்திருக்கின்றது. இந்த கார் ரூ. 5.49 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha)

மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக புதிய தலைமுறை தார் உருவெடுத்துள்ளது. இந்த கார் மாடலுக்கு போட்டியளிக்கும் வகையில் இந்தியாவில் ஃபோர்ஸ் நிறுவனம் களமிறக்கியதே குர்கா. மிகப் பெரிய அளவில் இதன் மீதான எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கான அறிமுகத்தை ஃபோர்ஸ் செய்து வைத்தது. ரூ. 13.59 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo)

பொலிரோ எஸ்யூவி கார் பிரிவில் புதிய தேர்வாக மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக விலையாக இக்காருக்கு ரூ. 8.48 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முந்தைய மாடல் பொலிரோவைக் காட்டிலும் இது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

ரெனால்ட் கைகர் (Renault Kiger)

இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்குக் கிடைத்து வரும் மலிவு விலை கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் வந்த வாகனமே கைகர். இது மிக சிறந்த மைலேஜ் தரும் காரும்கூட. இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 20.5 கிமீ வரை மைலேஜ் தருகிறது. இது அராய் அமைப்பு வெளியிட்ட தகவல் ஆகும். இந்தியாவில் ரூ. 5.64 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

டாடா சஃபாரி (Tata Safari)

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் டாடா சஃபாரியும் ஒன்று. இந்த கார் மாடலை டாடா மோட்டார்ஸ் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்-போவிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடப்பாண்டின் மத்தியில் இதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த கார் ரூ. 14.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender)

லேண்ட் ரோவர் இந்தியா ஸ்போர்ட்ஸ் வாகன பிரியர்களைக் கவரும் வகையில் அதன் டிஃபெண்டர் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் இந்தியாவில் டிஃபெண்டர் 90 மற்றும் டிஃபெண்டர் 110 ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இவற்றிற்கு இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 73.98 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

2021 ஸ்பெஷல்: இந்த ஆண்டுல இத்தன புதுமுக கார்கள் அறிமுகமாச்சா! எல்லாத்துக்குமே இப்போ டிமாண்ட் அதிகம்!

கியா கேரன்ஸ் (Kia Carens)

2021ம் ஆண்டின் இறுதியை அலங்கரிக்கும் வகையில் கியா நிறுவனம் கேரன்ஸ் எம்பிவி வாகனத்தை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. மேலும், 2022ம் ஆண்டை அலங்கரிக்கும் வகையில் இக்காரை விற்பனைக்குக் கொம்டு வர இருக்கின்றது. முதல் பாதிலேயே இது விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் எம்பிவி ரக வாகனமாக இருந்தாலும் தோற்றத்தில் எஸ்யூவி காரை போன்று காட்சியளிக்கின்றது. ஆகையால், இரு பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களுக்கும் இதன் வருகை கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Important car launches in 2021 here is full list
Story first published: Saturday, December 18, 2021, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X