எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

காரில் எப்போதும் இருக்க வேண்டிய முக்கியமான டூல்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

கார் ஓட்டுவது என்பது உற்சாகமான அனுபவம். ஆனால் நடுவழியில் எங்கேயாவது சிக்கி தவிக்காத வரைதான் கார் ஓட்டுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். காரில் ஏற்படும் சிறிய பழுது காரணமாக நடுவழியில் தனியாக சிக்கி தவிக்கும் அனுபவம் பலருக்கும் ஏற்படுகிறது. தேவையான டூல்கள் (Tools) எதுவும் இல்லாத காரணத்தால்தான், அவர்கள் நடுவழியில் தவிக்க நேரிடுகிறது.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

எனவே காரில் எப்போதும் இருக்க வேண்டிய அவசியமான டூல்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். காரில் பயணம் செய்யும்போது, நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பதற்கு இந்த டூல்கள் உதவி செய்யும். நீங்கள் ஏதாவது ஆபத்தில் சிக்கி கொண்டால், நிச்சயம் இந்த டூல்கள் உங்களை அதில் இருந்து மீட்கும்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

லைஃப் ஹேமர் (Life Hammer)

அவசர சூழ்நிலைகளில் இந்த சிறிய டூல், அதிசயங்களை நிகழ்த்தும். லைஃப் ஹேமரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படக்கூடாது என நாங்கள் நினைக்கிறோம். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லைஃப் ஹேமர் எப்போதும் உங்கள் காரில் இருக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அவசர சூழ்நிலையில், காரின் கண்ணாடிகளை உடைக்கவும், சீட் பெல்ட்டை அறுக்கவும் லைஃப் ஹேமர் பயன்படும். பொதுவாக சீட் பெல்ட்டை அறுப்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் அந்த சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால், லைஃப் ஹேமர் உதவி செய்யும். லைஃப் ஹேமரின் விலை மிகவும் குறைவுதான். ஆனால் இதனால் கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியது.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

தீ அணைப்பான் (Fire Extinguisher)

பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்றால், உங்கள் காரில் தீ அணைப்பான் இருப்பதும் அவசியம். இந்தியாவை பொறுத்தவரை சிஎன்ஜி கார்களில் மட்டும் தீ அணைப்பான் இருந்தால் போதுமானது என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. ஏனெனில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக எந்த வகையான எரிபொருளில் இயங்கும் காரும் தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

எனவே ஏதாவது அவசர சூழ்நிலை என்றால் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, தீ அணைப்பான்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆனால் காலாவதி தேதி முடிவடைந்த பிறகு ஒவ்வொரு முறையும் தீ அணைப்பான்களை மறக்காமல் மாற்றி விட வேண்டும். இதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

வீல் க்ளாம்ப்கள் (Wheel Clamps)

பயணத்தின்போது காரை எங்கே பார்க்கிங் செய்ய போகிறோம்? என்பது அனைத்து நேரங்களிலும் அனைவருக்கும் தெரியாது. கார் திருடு போவதை தடுப்பதற்காக நாம் பல்வேறு வசதிகளை பயன்படுத்துகிறோம். ஆனால் உங்கள் காரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டுமென்றால், அவசியமான டூல்களின் பட்டியலில் வீல் க்ளாம்களையும் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

உங்கள் காரின் வீல்களை லாக் செய்வதற்கு இது உங்களுக்கு உதவும். இதன் மூலம் உங்கள் காரின் பாதுகாப்பு அதிகரிக்கும். திறந்தவெளிகளில் காரை பார்க்கிங் செய்யும் பலர் வீல் க்ளாம்ப்களை பயன்படுத்தியிருப்பதை நீங்கள் அதிகமாக பார்க்க முடியும். எனவே நீங்களும் வீல் க்ளாம்ப்களை கூடுதல் பாதுகாப்பிற்காக பயன்படுத்துங்கள்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

டோ ஸ்ட்ராப் (Tow Strap)

உங்கள் காரில் எப்போதும் இருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான டூல் இது. சில சமயங்களில் கார் நடுவழியில் பிரேக் டவுன் ஆகி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மெக்கானிக் ஷாப் வெகு தூரத்தில் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், காரை மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டு செல்வது சிரமமான காரியம்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் டோ ஸ்ட்ராப் வரப்பிரசாதமாக இருக்கும். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்கலாம். மெக்கானிக் ஷாப் வரை காரை 'டோ' செய்து கொண்டு செல்வதற்கு அவர்கள் உங்களுக்கு உதவி செய்யக்கூடும். ஆனால் இதற்கு டோ ஸ்ட்ராப் இருப்பது அவசியம். எனவே காரில் எப்போதும் டோ ஸ்ட்ராப்பையும் வைத்திருங்கள்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

முதலுதவி பெட்டி (First-Aid Kit)

பொதுவாக புதிய கார் வாங்கும்போது நமக்கு முதலுதவி பெட்டி கிடைக்கும். ஆனால் சரியான நேரத்தில் அதனை அப்டேட் செய்வதற்கு நம்மில் பலரும் மறந்து விடுகிறோம். அல்லது இது எதற்கு? என அலட்சியமாக இருந்து விடுகிறோம். முதலுதவி பெட்டி எப்போது தேவைப்படும்? என்பது யாருக்கும் தெரியாது. எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

எனவே காரில் எப்போதும் முதலுதவி பெட்டியை வைத்திருங்கள். காரில் பயணம் செய்யும்போது முறையான முதலுதவி பெட்டி இருப்பது மிகவும் அவசியம். உங்கள் குடும்பத்தின் பயண தேவைகளுக்கு ஏற்ப முதலுதவி பெட்டியில், மருந்துகள் இருப்பதும் மிகவும் முக்கியமானது. சிறு அலட்சியம் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

டார்ச் லைட் (Torch Light)

பெரும்பாலும் கார் பழுதாகும் பிரச்னைகள் பிரகாசமான பகல் நேரத்தில்தான் நடக்கும் என நாம் நினைப்போம். ஆனால் கார் எப்போது வேண்டுமானாலும் பழுதாகலாம். இதில், இரவு நேரமும் அடங்கும். டார்ச் லைட் மிகவும் அடிப்படையான டூல். உங்கள் காரில் டார்ச் லைட் இருந்தால், இரவு நேரங்களில் ஏதேனும் பழுது ஏற்படும்போது நீங்கள் சோதனை செய்வதற்கு வசதியாக இருக்கும்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இன்று கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களில் டார்ச் லைட் வசதி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அது அவ்வளவு உதவிகரமாக இருக்குமா? என்பது சந்தேகம்தான். காரின் ஹூட் (Hood) பகுதியின் அடியில் ஏதேனும் ரிப்பேர் இருந்தால் அதனை சோதனை செய்வதற்கு உண்மையான டார்ச் லைட் இருப்பது அவசியம்.

எப்போ எது வேணாலும் நடக்கலாம்... உங்க காரில் இந்த டூல்கள் கண்டிப்பா இருக்கணும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இந்த டூல்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் நம்பிக்கையுடன் கார் பயணங்களை மேற்கொள்ள முடியும். இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால், அடிக்கடி கார் பயணங்களை மேற்கொள்ளும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த செய்தியில் வேறு ஏதேனும் டூல்கள் விடுபட்டிருந்தால், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

English summary
Important car tools life hammer fire extinguisher wheel clamps tow strap first aid kit torch light
Story first published: Thursday, September 30, 2021, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X