2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

2021ம் ஆண்டில் இந்தியாவில் எந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

மாருதி சுசுகி நிறுவனம், இந்நிறுவனத்தின் தயாரிப்புகளே 2021ம் ஆண்டில் அதிகம் விற்பனையாகி உள்ளன. பல தசாப்தங்களாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளே, விற்பனையில் முதல் இடத்தை பிடித்து வருகின்றன. ஏன் கடந்த நவம்பர் மாத விற்பனையில்கூட மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகளே அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் 7 இடத்தை பிடித்தன.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

வேகன் ஆர், ஸ்விஃப்ட், ஈகோ, பலினோ, எர்டிகா, விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் ஆல்டோ உள்ளிட்டவை நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளாக இருக்கின்றன. இவற்றிற்கே இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இவற்றிற்கு அடுத்தபடியாகவே ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்கள் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களாக நாட்டில் இருக்கின்றன.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும்பாலானவை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலைக் கொண்டவையாக இருக்கின்றன. இத்துடன், அவை அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட தயாரிப்பாகவும் இருக்கின்றன. இதன் விளைவாகவே மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

அந்தவகையில், நிறுவனத்தின் வேகன்ஆர் கார் மாடல் விற்பனையை நடப்பாண்டில் பெற்றிருக்கின்றது. 2021 ஜனவரி தொடங்கி 2021 நவம்பர் வரை 1,64,123 யூனிட் வரை இக்கார் விற்பனையாகி இருக்கின்றது. இது மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியாகும். இந்தியாவின் உயரமான ஹேட்ச்பேக் வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

வெறும் காஸ்மெட்டிக் அப்டேட்டுகளுடன் மட்டுமே பல தசாப்தங்களாக இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர், கே-சீரிஸ் எஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் யூனிட் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தொடர்ந்து, இந்த் காரில் சிஎன்ஜி மற்றும் ஏஎம்டி போன்ற சிறப்பான வசதிகளும் வழங்கப்படுகின்றன.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

இதுமட்டுமில்லைங்க அதிக இட வசதி, சிறப்பான மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றையும் வேகன்ஆர் வழங்குகின்றது. இவையும் இக்காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்க காரணமாக இருக்கின்றன. இந்த காருக்கு அடுத்தபடியாக மாருதி சுசுகி நிறுவனத்தின் பிற ஹேட்ச்பேக் கார் மாடல்களான ஸ்விஃப்ட் மற்றும் பலினோ ஆகியவை அதிக விற்பனையைப் பெற்றிருக்கின்றன.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

இரண்டும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையைப் பெற்றிருக்கின்றன. இவற்றிற்கு அடுத்தபடியாகவே ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா இருக்கின்றது. இந்த கார் அதிகபட்சமாக 1.17 லட்சம் யூனிட் வரை இந்தியாவில் விற்பனைப் பெற்றிருக்கின்றது. இதன் சகோதர மாடலான கியா செல்டோஸ் நாட்டின் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கின்றது. இதற்கு அடுத்த இடத்தில் டாடா நெக்ஸான் எஸ்யூவி இருக்கின்றது.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

டாடா மோட்டார்ஸ் இந்த எஸ்யூவி காரை மின்சார கார் தேர்விலும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதைத் தொடர்ந்து, ஸ்கோடா குஷாக், ரெனால்ட் க்விட், டொயோட்டா இன்னோவா, ஹோண்டா அமேஸ் மற்றும் மஹிந்திரா பொலிரோ கார்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

2022ம் ஆண்டிலும் மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளே அதிகம் விற்பனையாகும் வாகனங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போதே மாருதி சுசுகியின் புதிய தலைமுறை செலிரியோ கார் நல்ல வரவேற்பை இந்தியாவில் பெற தொடங்கி இருக்கின்றது. இந்த கார் நாட்டின் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. செலிரியோ ஹேட்ச்பேக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26.68 கிமீ வரை மைலேஜ் தரும்.

2021ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய கார் எது தெரியுமா?.. ஆச்சரியமடைவதற்கு ஒன்னும் இல்ல!

இதுமட்டுமில்லைங்க புதிய தலைமுறை செலிரியோ அதிக சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த காரை நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஹார்டெக்ட் பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. இக்காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், ட்யூவல் ஜெட், ட்யூவல் விவிடி, கே10சி பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 66 பிஎச்பி மற்றும் 89 என்எம் டார்க் திறனை வெளியற்றும் வசதிக் கொண்டது. மேலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஏஎம்டி அல்லது ஏஜிஎஸ் கியர் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
In 2021 which car topped in sales race in india
Story first published: Friday, December 31, 2021, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X