ரொம்ப எதிர்பார்த்தாங்க, ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift..!

பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட மோதல் ஆய்வில் இந்திய தயாரிப்பு Suzuki Swift கார் பூஜ்ஜியம் தர ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழுமையான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

Suzuki நிறுவனம் தயாரித்து வரும் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக Swift இருக்கின்றது. இது நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பாக மட்டுமில்லாமல் இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இக்காருக்கு மிக அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

இதன் விளைவு ஒவ்வொரு மாதமும் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இக்கார் இடம் பிடித்துவிடுகின்றது. இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்று வரும் Swift கார்குறித்த ஓர் அதிர்ச்சிகரமான தகவலையே Latin NCAP அமைப்பு தற்போது வெளியிட்டிருக்கின்றது. இப்புதிய தகவலால் அதன் பயனர்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

Latin NCAP ஓர் புதிய கார்களின் தரம் குறித்து மதிப்பீடு செய்யும் அமைப்பு ஆகும். அந்தவகையில் சமீபத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள Suzuki உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட Swift காரை இந்த அமைப்பு ஆய்விற்கு உட்படுத்தியது. இது மேற்கொண்ட மோதல் ஆய்வில் Swift காரானது பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

அதாவது, இக்கார் துளியளவும் பாதுகாப்பான பயணங்களுக்கு உகந்த வாகனம் அல்ல என்பது ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. Latin NCAP அமைப்பு ஆய்விற்கு உட்படுத்தியிருக்கும் Swift ஆனது லத்தீனுக்கான இந்திய தயாரிப்பு மாடல் ஆகும். இந்த வெர்ஷனே பாதுகாப்பு தரம் குறித்து செய்யப்பட்ட ஆய்வில் பூஜ்ஜியம் ஸ்டார்களைப் பெற்று அனைத்து Swift கார் பயனர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

மோதல் ஆய்வில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் இக்கார் 15.53 சதவீதத்தை மட்டுமே பெற்றிருக்கின்றது. இதேபோல் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் பூஜ்ஜியம் சதவீதத்தை Swift பெற்றது. ஆய்வின் இந்த முடிவுகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் அமைந்துள்ளது. அதேசமயம், லத்தீன் நாட்டிற்கான இந்திய தயாரிப்பு Swift, பாதசாரிகள் மற்றும் சாலை பயனர்களுக்கான பாதுகாப்பில் 66 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

அதேவேலையில் காரில் இருக்கும் பாதுகாப்பு கருவிக்கான தர மதிப்பு 7 சதவீதம் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே பாதுகாப்பான பயணங்களுக்கு துளியளவும் உகந்த கார் அல்ல என பூஜ்ஜிய ஸ்டார் ரேட்டிங்கை Swift-க்கு Latin NCAP வழங்கியிருக்கின்றது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

Swift காரில் குறிப்பிட்ட சில பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததே இத்தகைய குறைவான ரேட்டிங்கைப் பெற காரணமாக இருப்பதாக Latin NCAP கருத்து தெரிவித்திருக்கின்றது. தலைக்கு பாதுகாப்பு வழங்கும் ஏர் பேக் இல்லாதது, நிலையான இஎஸ்சி இல்லாதது, சிஆர்எஸ்-க்கு நிறுவனம் பரிந்துரைக்காதது மற்றும் பின்புற தாக்கம்குறித்து ஆய்வு செய்தபோது காரின் கதவுகள் தானாக திறந்தது ஆகியவற்றின் அடிப்படையில் மிகக் குறைவான தர மதிப்புகளை Swift பெற்றிருக்கின்றது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

அதேவேலையில், ஐரோப்பாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் கார் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) உடன் அதிக தரத்துடன் விற்கப்பட்டு வருகின்றது. ஆனால், லத்தீன் அமெரிக்காவில் பக்கவாட்டு பகுதி, தலை பகுதிக்கான ஏர்பேக்குகள் மற்றும் ESC தரமாக வழங்கப்படவில்லை என்பதனை கண்காணிப்பு குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

Suzuki Swift கார் இதுபோன்று பூஜ்ஜிய ஸ்டார் ரேட்டிங்கை பெறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக இதன் முந்தைய தலைமுறையை Global NCAP அமைப்பு 2014ம் ஆண்டில் மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அப்போதும் இதேபோல் Swift கார் பூஜ்ஜிய ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

அதேவேலையில், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் மூன்றாம் தலைமுறை Swift கார் Euro NCAP அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்டில் மூன்று நட்சத்திர ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று அசத்தியது. இந்த தர மதிப்பை Swift காரின் ஸ்டாண்டர்டு வேரியண்டே பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப எதிர்பார்த்தாங்க ஆனா ஒரு ஸ்டார்கூட வாங்கல... பாதுகாப்பு ஆய்வில் மண்ணைக் கவ்விய Swift... பாதுகாப்புக்கு கேள்வி குறி!!

இதே மூன்றாம் தலைமுறை Swift இந்தியாவில் 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதனை Global NCAP அமைப்பு க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் Swift வெறும் 2 நட்சத்திர ரேட்டிங்கை மட்டுமே பெற்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறைவு மற்றும் நிலையான உடல் அமைப்பைப் பெறாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த குறைந்த ஸ்டார்களை பெற்றதாக Global NCAP கருத்து தெரிவித்தது.

இந்த மாதிரியான நிலையிலேயே புதிய லத்தீன் சந்தைக்கான Swift கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. பரிசோதனையின்போது இக்கார் நல்ல தர ரேட்டிங்கைப் பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது Swift கார்.

Most Read Articles

English summary
India made suzuki swift gets zero stars in latin ncap crash test
Story first published: Saturday, August 28, 2021, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X