Just In
- 47 min ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 3 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 4 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 5 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- Sports
"அதுதான் முக்கியம்".. போட்டிக்கு முன்பே சொல்லிவிட்டு செய்த தோனி.. பஞ்சாப்பை காலி செய்த அந்த 4 ஓவர்!
- News
நண்பர் விவேக் குணமடைய விரும்புகிறேன்.. தடுப்பூசி குறித்த வதந்தி பரப்பாதீர்கள்.. கமல்ஹாசன் ட்வீட்!
- Finance
உங்க ஆதார் – பான் நம்பரை இணைச்சீட்டிங்களா.. ரூ.1000 அபராதம் இருக்க மறந்துட வேண்டாம்..?!
- Movies
ஓய்வை வேற மாதிரி கழிக்கும் கேஜிஎஃப் ஹீரோ.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழக வீரர் நடராஜனை அடுத்து தார் எஸ்யூவி காரை பெற்ற மற்றுமொரு கிரிக்கெட் வீரர்... அவர் யாருனு தெரியுமா?
நடராஜனை தொடர்ந்து தார் எஸ்யூவி காரை மற்றுமொரு கிரிக்கெட் பெற்றிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மிக சமீபத்தில் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக இடம்பெற்று வரலாற்று சாதனைப் படைத்த ஆறு வீரர்களுக்கு புத்தம் புதிய தார் எஸ்யூவி காரை பரிசாக அளிக்க இருப்பதாக அறிவித்தார்.

சர்வதேச போட்டியின்போது அதிரடி சாதனைகளைப் படைத்த காரணத்திற்காக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதன்படி, அண்மையில் அனைத்து வீரர்களுக்கும் தார் எஸ்யூவி வழங்கப்பட்டது. இதில், ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோருக்கு தார் எஸ்யூவி வழங்கப்பட்டுவிட்டநிலையில், தற்போது புதிதாக மொஹமத் சிராஜிற்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்திரா தார் எஸ்யூவி காரை தான் பெற்றதாக இன்ஸ்டா பதிவின் வாயிலாக கிரிக்கெட் விளையாட்டு வீரர் மொஹமத் சிராஜ் தகவல் தெரிவித்திருக்கின்றார். இக்காரை மொஹமத் சிராஜின் மூத்த அண்ணனும் அவரது தாய் ஆகிய இருவரும் சென்றே பெற்றிருக்கின்றார். தற்போது ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்று வருகின்ற காரணத்தினால் தன்னால் நேரில் சென்று தார் எஸ்யூவியை பெற முடியவில்லை என காரணம் கூறியிருக்கின்றார்.

தமிழக வீரர் நடராஜ், தனக்கு பரிசாக கிடைத்த தார் எஸ்யூவி காரை தனது கிரிக்கெட் குருவிற்கு (பயிற்சியாளர்) பரிசாக வழங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தான் கிரிக்கெட் உலகில் சாதனையாளராக மாறுவதற்கு இவரே காரணம் என கூறி காரை அவர் பரிசாக வழங்கியிருந்தார்.

இந்த நிலையிலேயே நடராஜைத் தொடர்ந்து மொஹமத் சிராஜிற்கு தார் எஸ்யூவி பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. தற்போது இந்தியாவில் தார் எஸ்யூவி காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இதனால், நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்கள் காத்திருப்பு காலம் 10 மாதங்கள் வரை நீண்டு காணப்படுகின்றது. இந்த காத்திருப்பு காலம் மாநிலம் மற்றும் நகரம் வாரியாக மாறுபட்டு காணப்படுகின்றது.

மஹிந்திர தார் மூன்று ரூஃப் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சாஃப்ட் டாப், கன்வெர்டபிள் சாஃப்ட் டாப் மற்றும் ஹார்ட் டாப் ஆகிய தேர்வுகளில் கார் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட பரிசோதனையில் இக்கார் 5ற்கு 4 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், அதிக பாதுகாப்பான பயணத்தை இக்காரில் நம்மால் பெற முடியும்.

மஹிந்திரா தார் கார் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் எஞ்ஜின் 150 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோன்று, டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 130 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

இரு எஞ்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இக்கார், ரூ. 12.10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.