விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!

இசுஸு மோட்டார்ஸின் முதல் பிஎஸ்6 வாகனமான டி-மேக்ஸின் விலை விரைவில் ரூ. 1 லட்சம் அளவில் அதிகரிக்கப்படவுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விலை உயர்விற்கு காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான இசுஸு மோட்டார்ஸ் அதன் பிஎஸ்6 வாகனங்களான டி-மேக்ஸ் ரெகுலர் கேப் மற்றும் டி-மேக்ஸ் எஸ்-கேப்-இன் எக்ஸ்ஷோரூம் விலைகளை அடுத்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ரூ.1 லட்சம் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!

தற்சமயம் டி-மேக்ஸ் ரெகுலர் கேப் மற்றும் டி-மேக்ஸ் எஸ்-கேப் வாகனங்களின் விலைகள் முறையே ரூ.8.75 லட்சம் மற்றும் ரூ.10.74 லட்சம் என்ற அளவில் உள்ளன. இவற்றின் விலைகள் கடந்த 2021 ஜனவரி மாதத்தில் தான் ரூ.10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டிருந்தன.

விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!

அதனை தொடர்ந்து மீண்டும் இந்த பிஎஸ்6 இசுஸு வாகனங்களின் விலைகள் அடுத்த ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்படவுள்ளன. இந்த விலை உயர்வுக்கு அதிகரித்துவரும் வாகன பாகங்களை உருவாக்குவதற்கான செலவு போக்குவரத்து கட்டணம் மற்றும் ஏற்றுமதி & இறக்குமதிகளுக்கான செலவை இசுஸு நிறுவனம் காரணங்களாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது.

விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!

புதிய மாசு மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்கிரேட் செய்யப்படாததால் இந்தியாவில் தனது வாகனங்கள் அனைத்தின் விற்பனையையும் இசுஸு நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறுத்தியது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதிலும் அதிகரித்ததால் இந்த நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 வாகனங்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் தான் விற்பனைக்கு வந்தன.

விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!

இதனால் விரைவில் விலை அதிகரிப்பை ஏற்கவுள்ள பிஎஸ்6 டி-மேக்ஸ் வாகனங்கள் மட்டும் தான் தற்போதைக்கு இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து நம் நாட்டு சந்தையில் விற்பனையில் உள்ளன. அடுத்ததாக எம்யு-எக்ஸ் எஸ்யூவி மற்றும் வி-க்ராஸ் லைஃப் ஸ்டைல் பிக்அப் ட்ரக் வாகனங்களை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்த இசுஸு திட்டமிட்டுள்ளது.

விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!

இதில் வி-க்ராஸ் பிஎஸ்6 வாகனம் மிக விரைவில் அடுத்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் எம்யு-எக்ஸ் வாகனத்தின் பிஎஸ்6 வெர்சனும் சமீபத்தில் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!

தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் இவை இரண்டிற்கும் புதிய தலைமுறை அப்கிரேட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. இந்த அப்கிரேட்களுடன் இவை அறிமுகப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. இவ்வளவு ஏன், இவை இரண்டையும் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இதுவரையில் இசுஸு நிறுவனத்தில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu Motors India announces increase in price of CV range
Story first published: Friday, March 5, 2021, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X