ஒருவழியாக சந்தைக்கு வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்!

ஆஃப்ரோடு கார் பிரியர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் பிஎஸ்-6 மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதற்காக, டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருவழியாக சந்தைக்கு வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்... டீசர் வெளியீடு!

இந்தியாவின் ஆஃப்ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாடலாக இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் வாகனம் உள்ளது. சாதாரணமாக, ஆஃப்ரோடு வாகனங்கள் என்றால் எஸ்யூவி மாடல்கள்தான் முக்கிய இடத்தை பெறும். ஆனால், இந்திய ஆஃப்ரோடு வாகன பிரியர்களுக்கு ஒரு புதுவிதமான தேர்வாக இசுஸு வி க்ராஸ் இருந்து வருகிறது.

ஒருவழியாக சந்தைக்கு வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்... டீசர் வெளியீடு!

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, இசுஸு வி க்ராஸ் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும், கொரோனா பிரச்னை காரணமாக, வி க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுகத்தையும் இசுஸு தள்ளிப் போட்டு வருகிறது.

ஒருவழியாக சந்தைக்கு வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்... டீசர் வெளியீடு!

புதிய இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிஎஸ்-6 மாடல் பல மாதங்களாக சோதனை ஓட்டத்தில் இருந்தது. இந்த நிலையில், ஒருவழியாக இந்த புதிய மாடலை சந்தைக்கு கொண்டு வருவதற்கு இசுஸு திட்டமிட்டுள்ளது. இதற்காக டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஒருவழியாக சந்தைக்கு வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்... டீசர் வெளியீடு!

புதிய இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலில் 1.9 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் 150 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறாது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஒருவழியாக சந்தைக்கு வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்... டீசர் வெளியீடு!

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கின் பிஎஸ்-6 மாடலானது வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது. அதேநேரத்தில், க்ரோம் பூச்சுடன் கூடிய க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்கஃப் பிளேட் மற்றும் பின்புறத்தில் டிடிஐ என்ற டீசல் எஞ்சினை குறிப்பிடும் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஒருவழியாக சந்தைக்கு வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்... டீசர் வெளியீடு!

உட்புறத்திலும் பெரிய அளவிலான அப்டேட்டுகள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. புதிய மாடலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒருவழியாக சந்தைக்கு வருகிறது புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்... டீசர் வெளியீடு!

2021 மாடலாக வரும் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu Motor India has teased the D-Max V-Cross BS6 ahead of its launch in the Indian market. The teaser image of the upcoming pick-up has been released on the brand's website and across its social media handles.
Story first published: Saturday, April 3, 2021, 14:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X