வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிஎஸ்6 வாகனத்தின் புதிய டீசர் படம் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

இசுஸு நிறுவனத்தின் பிக்அப்-ட்ரக் வாகனமாக விற்பனை செய்யப்பட்டு வந்த டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படாததால் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் விற்பனையில் இல்லை.

வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

ஆனால் தற்போது இந்த ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனம் அதன் முக்கியமான வாகனங்களை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த வகையில் இந்த பிக்அப்-ட்ரக் வாகனமும் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

இந்த நிலையில் தான் தற்போது இந்த பிஎஸ்6 வாகனத்தின் டீசர் படம் பிராண்டின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்தில், ‘வலிமையான ஒன்று வழியில் உள்ளது' என பிஎஸ்6 டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனத்தை தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

இந்த பிக்அப் ட்ரக்கில் முன்பு வழங்கிய அதே 1.9 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் டீசல் என்ஜின்களை தான் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக, தேர்வாக இசுஸு நிறுவனம் வழங்கவுள்ளது. இதில் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் இந்த பிக்அப் ட்ரக்கின் டாப் வேரியண்ட்டான இசட் ப்ரெஸ்டிஜில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

அதிகப்பட்சமாக 148 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. விலை குறைவான மற்ற வேரியண்ட்களில் வழங்கப்பட உள்ள 2.5 லிட்டர் டீசல் என்ஜின் 135 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியது.

வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

இந்த இரு என்ஜின்களுடனும் தேர்ந்தெடுக்கக்கூடிய 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டது. புதிய பிஎஸ்6 வெர்சனிலும் இதே செட்அப் மற்றும் ஆற்றல் அளவுகள் தான் தொடரப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

அதேபோல் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸின் வெளிப்புற தோற்றத்திலும் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. மிகவும் நுட்பமான திருத்தியமைப்புகள் மட்டுமே கொண்டுவரப்படலாம்.

வலிமையான வாகனமாக இசுஸுவின் பிஎஸ்6 பிக்அப் ட்ரக்!! அறிமுகத்திற்கு தயார்...

பிஎஸ்4 டி-மேக்ஸ் வி-க்ராஸின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.16.55 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் இருந்தன. இந்த பிக்அப் ட்ரக் வாகனத்தின் பிஎஸ்6 வெர்சனை கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் அதிகமான விலைகள் இசுஸு விற்பனைக்கு கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளது.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
2021 Isuzu D-Max V-Cross BS6 Teased Ahead Of Launch. The Most-Awaited Pick-Up Is Almost Here!
Story first published: Friday, April 2, 2021, 23:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X