புதிய இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுகம் குறித்து புதிய தகவல்
ஆஃப்ரோடு வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலின் அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் ஆஃப்ரோடு வாகன மார்க்கெட்டில் இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் வாடிக்கையாளர்களின் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, இசுஸு வி க்ராஸ் மாடல் விற்பனையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.
மேலும், கொரோனா பிரச்னை காரணமாகவும், இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுகம் தள்ளிப் போய் வருகிறது. கடந்த அக்டோபரிலேயே இந்த மாடல் எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய கார் சந்தையில் சூழல் வெகுவாக மேம்பட்டு வருவதையடுத்து, வரும் ஏப்ரல் மாதத்தில் வி க்ராஸ் பிஎஸ்-6 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துவிட இசுஸு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக டீம் பிஎச்பி மூலமாக வெளியாகி இருக்கும் தகவல் தெரிவிக்கிறது.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். மற்றொரு 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் பிஎஸ்-6 தேர்வுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உறுதியாக தெரியவில்லை.

மூன்றாம் தலைமுறை மாடலாக இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சைடு ஸ்டெப், ரூஃப் ரெயில்கள், முன்புறத்தில் ஸ்கஃப் பிளேட், புதிய க்ரில் அமைப்பு உள்ளிட்டவை தொடர்ந்து தக்க வைக்கப்படும் என தெரிகிறது.

வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தேர்வு கொடுக்கப்பட்டு இருக்கும். ஏற்கனவே க்ரோம் பூச்சுடைய பாகங்கள் புதிய மாடலில் பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் வர இருக்கிறது.

புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, ரியர் பார்க்கிங் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல வசதிகள் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும்.

தற்போதைய மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப்ரோடு வாகன பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து அம்சங்களுடன் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். பிரிமீயம் பிக்கப் டிரக் ரகத்திலான இந்த வாகனம் இந்தியாவில் ஆஃப்ரோடு எஸ்யூவி கார்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








