ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

ஆஃப்ரோடு கார் பிரியர்களின் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் அறிமுக தேதி குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

 ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

ஆஃப்ரோடு பிரியர்களுக்கு தனித்துவமான சிறந்த தேர்வாக இசுஸு வி க்ராஸ் இருந்து வருகிறது. பயன்பாடு, சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் ஆஃப்ரோடு பிரியர்களின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது.

 ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கொரோனாவால் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்த இந்த வாகனத்தின் அறிமுகம் இந்த மாதம் நடந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

 ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

அண்மையில் டீசர்கள் வெளியிடப்பட்ட நிலையில், வரும் 8ந் தேதி புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.

 ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

இதுவரை கசிந்த தகவல்களின்படி, புதிய இசுஸு வி க்ராஸ் இசட் மற்றும் இசட் பிரஸ்டீஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹைலேண்டர் என்ற விலை குறைவான தேர்வும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

 ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

இந்த புதிய மாடலானது 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், பயன்பாடு அடிப்படையில் இந்த வாகனத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

 ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

இந்த புதிய வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.9 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

 ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

இந்த பிக்கப் டிரக்கில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு தேவையான வகையில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலில் ஷிஃப்ட் ஆன் ஃப்ளை தொழில்நுட்ப வசதியுடன் வர இருக்கிறது.

 ஆஃப்ரோடு கார் பிரியர்களின் கவனத்திற்கு... இதுதான் புதிய இஸுகி வி க்ராஸ் அறிமுக தேதி?

இதன் ஹைலேண்டர் மாடலானது இசுஸு டி மேக்ஸ் எஸ் கேப் மாடலைவிட சற்றே கூடுதல் பிரிமீயம் அம்சங்கள் கொண்டதாக இருக்கும். 225மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஸ்டீல் வீல்கள் மற்றும் ஸ்பீடு லிமிட்டர் இல்லாத தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
According to report, Isuzu V-Cross & Hi-Lander to be launched in India on 8th May 2021.
Story first published: Wednesday, May 5, 2021, 13:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X