மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!

டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய ஹைபிரிட் டிராக்டரை ஐடிஎல் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிராக்டர் குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

சர்வதேச டிராக்டர் உற்பத்தி நிறுவனம் (International Tractors Limited - ITL), சோலிஸ் யான்மர் ரேஞ்ஜில் புதிய டிராக்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சோலிஸ் ஹைபிரிட் 5015 என்ற பெயரிலேயே டிராக்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

இது அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட டிராக்டர் ஆகும். ஜப்பானிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தைக் கொண்டு நிறுவனம் இந்த டிராக்டரை கட்டமைத்துள்ளது. பேன் இந்தியா திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு, விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த டிராக்டருக்கு ரூ. 7,21,000 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

ஐடிஎல் நிறுவனமே இந்தியாவில் முதல் முறையாக மின்சார ஊக்க சக்தி (E-PowerBoost) கொண்ட டிராக்டரை அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். இதன் அடிப்படையிலேயே தற்போது புதுமுக டிராக்டரையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது ஓர் நான்கு வீல் இயக்கம் கொண்ட டிராக்டர் ஆகும்.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

ஐடிஎல் நிறுவனம் இந்த டிராக்டரை ஜப்பானிய நிறுவனமான யான்மர் அக்ரிபிசினஸ் கோ. லிமிடெட்., எனும் நிறுவனத்துடன் இணைந்தே உருவாக்கியிருக்கின்றது. இந்த நிறுவனமே டிராக்டரின் ஹைபிரிட் டெக்னாலஜிக்கு பெரும்பான்மையான தொழில்நுட்ப உதவியை வழங்கி வரும் நிறுவனம் ஆகும்.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

ஹைபிரிட் வாகனம் என்பது மின் மற்றும் எரிபொருள் மோட்டார் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான வசதிக் கொண்டதே தற்போது அறிமுகமாகியுள்ள சோலிஸ் ஹைபிரிட் 5015 டிராக்டர். விவசாயிகளுக்கு எரிபொருள் சிக்கனத்தை வழங்கி, கூடுதல் செலவீணத்தைக் குறைக்கும் வகையில் இவ்வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

இந்த டிராக்டரில் டீசலால் இயங்கக்கூடிய எஞ்ஜினையே நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 50 எச்பி திறனை வெளியேற்றும். இதுமட்டுமின்றி தேவைக்கேற்ப 45எச்பி மற்றும் 60 எச்பி திறன்களை வெளிப்படுத்தக்கூடிய வாகனமாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சோலிஸ் ஹைபிரிட் 5015 டிராக்டர் 3இன்1 டிராக்டராக பயன்படும் என்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

சோலிஸ் ஹைபிரிட் 5015 டிராக்டரில் மிக எளிமையாக பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் எல்இடி திரை வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தகவல்களை வழங்கக்கூடியது. பேட்டரி லெவல், எரிபொருள் அளவு என எக்கசக்க தகவல்களை வழங்கும்.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

விவசாயிகளுக்கு அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கிலேயே இந்த புதுமுக டிராக்டரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக ஐடிஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராமன் மித்தல் கூறியிருக்கின்றார்.

மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் அறிமுகம்... விவசாயிகள் காச மிச்சப்படுத்த இதுவே உகந்தது!!

மேலும் பேசிய அழர், "எங்கள் ஹைப்ரிட் டிராக்டரில் ஈ-பவர்பூஸ்ட் போன்ற மேம்பட்ட அம்சங்கள் உள்ளன. இது விவசாயிகளுக்கு அதிக எஞ்ஜின் திறன் தேவைப்படும்போது உதவியாக இருக்கும். குறிப்பாக, எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த உதவும்" என கூறினார்.

குறிப்பு முதல் இரண்டு புகைப்படங்களைத் தவிர பிற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
ITL Launches Solis Hybrid 5015 Tractor In India. Read In Tamil.
Story first published: Thursday, April 15, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X