ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த மாதமே இந்த கார் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எஸ்யூவிக்கு அடுத்து இரண்டாவது மாடலாக ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனால், இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

கடந்த மாதம் வெளியானத் தகவலின்படி, வரும் 9ந் தேதி ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தது. ஆனால், தற்போது வரும் 23ந் தேதி இந்த புதிய சொகுசு ரக எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

புதிய ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் காரின் வடிவமைப்பு எல்லோரையும் பேச வைத்தது. அதேபோன்று, இந்த காரின் ரேஞ்ச் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், நடைமுறை பயன்பாட்டிற்கும் சிறந்ததாக இருக்கும்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

இந்த காரில் 90kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 470 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 395 பிஎச்பி பவரையும், 696 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

இதனால், இந்த கார் செயல்திறனில் மிரட்டலாக இருக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறனை இந்த கார் பெற்றுள்ளது.காருடன் 7.4kW ஏசி சார்ஜர் வழங்கப்படும்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

இந்த காரின் டாப் வேரியண்ட்டில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், டைனமிக் இண்டிகேட்டர்கள், கால் அசைவு மூலமாக டெயில் கேட்டை திறக்கும் வசதி, விண்ட்ஸர் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 3டி சர்ரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றிருக்கும்.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

புதிய ஜாகுவார் ஐ பேஸ் கார் இந்தியாவில் எஸ், எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த காருக்கு 5 ஆண்டுகள் பராமரிப்பு திட்டம் மற்றும் சாலை அவசர திட்டம் முதலில் முன்பதிவு செய்யும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது.

ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி குறித்து புதிய தகவல்... ஆனால், இந்த மாதமே வருகிறது!

தவிரவும், இதன் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டியும் வழங்கப்படும். சொகுசு மின்சார கார் மார்க்கெட்டில் இந்த கார் அதிக அளவிலான வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 2, 2021, 14:35 [IST]
English summary
Jaguar is all set to launch of its first electric car I Pace in India on 23 March, 2021.
மேலும்... #ஜாகுவார் #jaguar
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+