கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

இந்திய தொழிலதிபர்களின் எதிர்பார்ப்பை வெகு நாளாக தூண்டி வரும் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் நாளைக்கு விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

இந்தியாவில் சொகுசு கார்களுக்கான தேவை கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது மிக அதிக அளவில் உயர்ந்து காணப்படுகின்றது. செல்வந்தர்கள் பலர் சொகுசான பயணத்தை நோக்கி நகர்ந்திருப்பதன் காரணத்தினால் லக்சூரி கார்களின் தேவை நாட்டில் அதிகரித்திருக்கின்றது. இதனை உணர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் சொகுசு கார்களை தொடர்ச்சியாக இந்தியாவில் களமிறக்கத் தொடங்கியிருக்கின்றன.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

அந்தவகையில், இந்திய செல்வந்தர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சொகுசு கார்களில் ஜாகுவார் ஐ-பேஸ் (Jaguar I-Pace) மாடலும் ஒன்று. இந்த காரையே மிக விரைவில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக ஜாகுவார் நிறுவனம் மிக சமீபத்தில் தகவல் வெளியிட்டது. இந்நிலையில், நாளை இக்கார் அறிமுகமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

ஆகையால், இக்காரை நாளை முதல் அதிகாரப்பூர்வமாக இந்தியர்களால் புக் செய்ய முடியும். அதேசமயம், இக்காரின் அறிமுகத்தை ஏற்கனவே ஜாகுவார் நிறுவனம் உறுதிப்படுத்திவிட்டதால், புக்கிங் பணிகளை ஜாகுவார் சொகுசு கார் விற்பனையாளர்கள் முன்கூட்டியே தொடங்கிவிட்டனர்.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

ஐாகுவார் ஐ-பேஸ் ஓர் மின்சார காராகும். அதிக சொகுசு வசதிகள் கொண்ட நாட்டின் முதல் சொகுசு கார் இதுவே ஆகும். இந்த கார் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஆடி இ-ட்ரான் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி ஆகிய மின்சார கார்களுக்கு போட்டியாக முன்கூட்டியே இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

இக்கார் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எஸ், எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய வேரியண்டுகளிலேயே ஜாகுவார் ஐ-பேஸ் கார் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. சுமார் 1 கோடி ரூபாய் தொடங்கி 1.2 கோடி ரூபாய் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்ட மின்சார காராக இது இருக்கின்றது. மேலும், இதில் இடம் பெற இருக்கும் மின் மோட்டார் 394 பிஎச்பி மற்றும் 396 என்என் டார்க்கை வெளியற்றும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இந்த மோட்டாருக்கு தேவையான மின்திறனை வழங்குவதற்காக 90kWh லித்தியம் அயன் பேட்டரியை ஜாகுவார் பயன்படுத்தியிருக்கின்றது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 480 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 45 நிமிடங்களே போதும். ஆனால், பாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் மட்டுமே இத்தகைய குறைந்த நேரத்தில் மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும். மாறாக, வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் குறைந்தது 10 மணி நேரங்களாவது முழுமையாக சார்ஜ் அடைய ஜாகுவார் ஐ-பேஸ் எடுத்துக் கொள்ளும்.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

இக்காரில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார்கள் அதி-திறன் வாய்ந்தவையாக இருக்கின்றது. இவை பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.8 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இந்த மின்சார காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ என்பது குறிப்பிடத்தகுந்தது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

இது ஓர் மின்சார காராக இருந்தாலும் கவர்ச்சிக்கும், லக்சூரிக்கும் சற்றும் குறைச்சலில்லா வாகனமாகன இது காட்சியளிக்கின்றது. ஜாகுவார் நிறுவனத்தின் தயாரிப்பு என்றால் சும்மாவா என கூறும் வகையில் இது அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இதன் கவர்ச்சியான தோற்றம் கண்களை மட்டுமில்லைங்க மனதையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

19 இன்சிலான டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி மின் விளக்கு, முழு நீள கண்ணாடி மேற்கூரை, இரு தொடுதிரை இன்ஃபோடெயின்மென் சிஸ்டம், இணைப்பு தொழில்நுட்பம், தலைகளுக்கு மேல் டிவி திரை, லெதர் இருக்கைகள், சென்சார் அடிப்படையிலான பூட் மற்றும் 825W மெரிடியன் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட எக்கசக்க பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

மேற்கூறியது இன்னும் சில அம்சங்களை கூடுதல் கட்டண தேர்வில் வழங்க இருக்கின்றது ஜாகுவார். அந்தவகையில், ஜாகுவார் ஐ-பேஸ் காரில் ஏர் சஸ்பென்ஷன், நான்கு விதமான க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் ரியர் வியூ கண்ணாடி, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களைக் கொள்ளும் திறன் கொண்ட காற்று வடிகட்டி போன்றவற்றை ஆப்ஷனலாக வழங்க ஜாகுவார் திட்டமிட்டுள்ளது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

இதுதவிர, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மரியாதைச் செலுத்தும்விதமாக 5 வருடங்கள் சர்வீஸ் பேக்கேஜ் மற்றும் 5 வருடங்கள் ரோட்சைட் அசிஸ்டண்ட், 8 வருடங்கள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர்கள் பேட்டரிக்கான வாரண்டியை வழங்க இருப்பதாக ஜாகுவார் தகவல் வெளியிட்டுள்ளது.

கண்ணை கவரும் கவர்ச்சியான ஸ்டைல்... நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார்...

ஆகையால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகன பயணம் மற்றும் சொகுசான பயண அனுபவத்ததை விரும்பும் வாடிக்கையாளர்களை ஜாகுவார் ஐ-பேஸ் மின்சார கார் கவர்ந்திழுக்கும் என நம்பப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar I-Pace Electric Car India Launch Tomorrow. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X