ரூ.1.51 கோடி விலையுள்ள காரின் டெலிவரியை தொடங்கிய பிரபல நிறுவனம்... புக்கிங் பணி தொடங்கி ரொம்ப நாள் ஆகுது!
ஜாகுவார் (Jaguar) நிறுவனம், எஃப்-பேஸ் எஸ்விஆர் (F-Pace SVR SUV) காரின் டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்னரே இக்காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்ட நிலையில் இப்போதே இக்காருக்கான டெலிவரி பணிகளை நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனம், அதன் எஃப்-பேஸ் எஸ்விஆர் (F-Pace SVR SUV) எனும் புதுமுக எஸ்யூவி ரக காரை இந்தியாவில் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு இந்தியாவில் மிக சமீபத்தில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது டெலிவரி பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதி வேக மற்றும் கூடுதல் சிறப்பு வசதிகள் கொண்ட காராக இக்காரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதன் புக்கிங் பணிகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது இக்காரின் டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இக்காருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1.51 கோடி என்ற விலையை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இன்னும் சில லட்சங்கள் உடன் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி காரில் அதிக திறன் வெளிப்பாட்டிற்காக 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 543 எச்பி மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், வெறும் நான்கே செகண்டுகளில் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு நூறு கிலோமீட்டர் எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

எனவேதான் இதனை அதி-திறன் கொண்ட கார் என நிறுவனம் குறிப்பிடுகின்றது. அதிக திறன் வெளிப்பாடு மற்றும் மிக உயரிய விலை ஆகியவற்றின் காரணத்தினால் இக்கார் ஜாகுவாரின் உயர்நிலை தயாரிப்புகளில் ஒன்றாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. எஃப்-பேஸ் எஸ்விஆர் காரில் அதிக பிரீமியம் மற்றும் சிறப்பு சொகுசு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இக்காரில் எஞ்ஜினை குளிர்விக்கும் விதமாக பெரிய அளவு துளைகள் மற்றும் அபர்சர்கள் முன் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் கவர்ச்சியான முன்பக்கத்தை தோற்றுவிக்கும் வகையில் இருக்கின்றது. இதன் முன் பக்க பம்பர் எக்ஸ்-வடிவ பிளேடு போன்று காட்சியளிக்கின்றது. இதன் வாயிலாகவே காற்றோட்டம் எஞ்ஜினுக்கு செல்லுகின்றது.

மேலும், காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக எல்இடி குவாட் ஹெட்லேம்ப், இரட்டை ஜே போன்ற பகல் நேர மின் விளக்கு உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், பிக்ஸல் எல்இடி தொவில்நுட்பம் கூடுதல் அப்ஷனலாக வழங்கப்படுகின்றது. இந்த மின் விளக்குகள் அனைத்தும் எதிரில் வாகன ஓட்டிகளுக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறமும் பல மடங்கு கவர்ச்சிகரமான மற்றும் ஈர்க்கக் கூடிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், 11.4 இன்ச் வளைவான எச்டி ரக தொடுதிரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலில் இடம் பெற்றிருந்ததைக் காட்டிலும் மும்மடங்கு அதிக பிரகாசமானது மற்றும் 48 சதவீதம் பெரியது ஆகும்.

பிஎம்2.5 ஃபில்டரேஷன், சாஃப்ட்வேர்-ஓவர்-தி-ஏர் (Software-Over-The-Air) கேபாபிளிட்டி, 3டி சரவுண்ட் கேமிரா தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.இத்துடன், கூடுதல் தேர்வாக ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகளையும் ஜாகுவார் நிறுவனம் இந்த காரில் வழங்க இருக்கின்றது.

ஜாகுவார் ஐ-பேஸ் ப்ளாக் எனும் எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் அண்மையில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. முதன்மையான மற்றும் சமீபத்திய அதிநவீன எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இது விளங்குகின்றது. இத்தகைய ஓர் எலெக்ட்ரிக் காரையே இந்திய சொகுசு வாகன பிரியர்களைக் கவரும் பொருட்டு இந்தியாவில் ஜாகுவார் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த எலெக்ட்ரிக் காரில் இரண்டு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விரு எலெக்ட்ரிக் மோட்டார்களும் இணைந்து அதிகப்பட்சமாக 395 பிஎஸ் மற்றும் 696 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். மேலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் இந்த எலெக்ட்ரிக் கார் எட்டிவிடும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஓர் சிறப்புமிக்க காருக்கே கடந்த மாதம் 29ம் தேதி அன்று புக்கிங்கை இந்தியாவில் ஜாகுவார் நிறுவனம் தொடங்கியது.


Click it and Unblock the Notifications








