2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் அதன் புகழ்வாய்ந்த கார் மாடலான எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மிக சமீபத்தில் இக்காருக்கான புக்கிங்கை நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருந்தது.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

தொடர்ந்து, தற்போது டெலிவரி பணிகளையும் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இக்காருக்கு ரூ. 69.99 லட்சம் என்ற உச்சபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காரை முதல் முறையாக ஆர்-டைனமிக் எஸ் ட்ரிம் எனும் புதிய தேர்வை ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிமுகப்படுத்தியுள்ளது.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 2.0 லிட்ட்ர் பெட்ரோல் அதிகபட்சமாக 184கிலோவாட் மற்றும் 365 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதேபோன்று, 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 150கிலோவாட் மற்றும் 430 என்எம் டார்க் திறனை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு கார் கணிசமான புதுப்பித்தல்களுடன் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனடிப்படையில் லேசான மாற்றங்கள் முகப்பு பகுதிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பேனட், முன் பக்க பம்பர், க்ரில் ஆகியவை புதிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

முன் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் இரட்டை 'ஜே' வடிவிலான டிஆர்எல் மின் விளக்கு பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருக்கின்றது. இந்த மின் விளக்கும் மெல்லிய இவை போன்றிருக்கும் முகப்பு மின் விளக்கும் சேர்ந்து 2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு காருக்கு வேற லெவல் தோற்றத்தை வழங்குகின்றன.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

இதேபோன்று, காரின் பின் பகுதியிலும் கவர்ச்சி சேர்க்கும் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், பின் பக்கத்திலும் அழகை தோற்றத்தை வழங்கக்ககூடிய பம்பர் மற்றும் மின் விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் தோற்றம் மட்டுமில்லைங்க செயல்திறனும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

குறிப்பாக, காருக்குள் இடம் பெற்றிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் பிரம்மிப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் இருக்கின்றது. காரின் காக்பிட் முன்பை விட பல மடங்கு போல்டாகவும், கூடுதல் கவனத்தைப் பெறும் வகையிலும் இருக்கின்றது.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. இது மறு சீரமைக்கப்பட்ட தோற்றத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கதவுகளுக்கு புதிய கேஸ்கள், 360 டிகிரி கிராப் வசதிக் கொண்ட ஹேண்டில், சுலபமாக கையாளக்கூடிய பானங்களை வைத்துக்கொள்ளும் ஹோல்டற்கள் உள்ளிட்டவையும் 2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

தொடர்ந்து, பிபி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 11.4 இன்சிலான எச்டி தொடு திரை, பிம்2.5 வடிகட்டி வசதிக் கொண்ட காற்று சுத்திகரிப்பான், 3டி சரவுண்ட் கேமிரா, மெரிடியன் ஆடியோ சிஸ்டம், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி மற்றும் ரிமோட் என ஏகப்பட்ட பிரீமியம் வசதிகளை ஜாகுவார் இந்த காரில் வாரி வழங்கியிருக்கின்றன.

2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம்... அம்மாடியோ இதுதான் இதோட விலையா?..

இதுபோன்ற சொகுசு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன காரணத்தினால்தான் இக்காரை ரூ. 69.99 லட்சம் என்ற விலைக்கு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொகை நாம் செலவு செய்யும் பணத்திற்கு ஏற்றது என ஜாகுவார் கார்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். 2021 ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு கார் மார்ஸ் சிவப்பு மற்றும் செய்னா டேன் ஆகிய இரு விதமான நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar Launches 2021 F-Pace Luxury SUV In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X