பிரத்யேகமான நீல நிறத்தில் ஜாகுவாரின் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன்!! நம்மால் வாங்க முடியது...

எஃப்-டைப் ரீம்ஸ் எடிசனை பற்றிய விபரங்களையும் காரின் படங்களையும் ஜாகுவார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரத்யேகமான நீல நிறத்தில் ஜாகுவாரின் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன்!! நம்மால் வாங்க முடியது...

வெறும் 150 யூனிட்களில் யுகே சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள புதிய எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன் கார் பிரெஞ்ச் ரேசிங் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

பிரத்யேகமான நீல நிறத்தில் ஜாகுவாரின் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன்!! நம்மால் வாங்க முடியது...

இந்த புதிய எடிசனை பி300 மற்றும் பி450 பின்சக்கர ட்ரைவ் கூபே தேர்வுகளில் ஜாகுவார் விற்பனை செய்யவுள்ளது. எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன் ஜாகுவாரின் பிரத்யேகமான படலத்துடன் கொண்டுவரப்படும் இரண்டாவது காராகும். முன்னதாக எக்ஸ்இ ரீம்ஸ் எடிசன் கடந்த 2019ல் விற்பனை செய்யப்பட்டது.

பிரத்யேகமான நீல நிறத்தில் ஜாகுவாரின் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன்!! நம்மால் வாங்க முடியது...

இந்த பிரத்யேகமான பெயிண்ட் உடன் பளபளப்பான கருப்பு நிறத்தில் பக்கவாட்டில் துவாரங்கள், வித்தியாசமான ஜாகுவார் லோகோ மற்றும் க்ரில் அமைப்பு முதலியவை அடங்கிய ‘வெளிப்பக்கத்திற்கான கருப்பு தொகுப்பு'-ஐயும் இந்த கார் பெற்றுள்ளது.

பிரத்யேகமான நீல நிறத்தில் ஜாகுவாரின் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன்!! நம்மால் வாங்க முடியது...

இதன் 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் 20 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்திற்கு ஏற்ப உட்புறமும் முற்றிலும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கதவு ஸ்விட்ச்கள், கதவு கைப்பிடிகள், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரத்யேகமான நீல நிறத்தில் ஜாகுவாரின் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன்!! நம்மால் வாங்க முடியது...

ஜாகுவார் எஃப்-டைப்பில் வழக்கமாக வழங்கப்படும் பனோராமிக் சன்ரூஃப், ஹீட்டட் இருக்கைகள், இரு நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல், ஹீட்டட் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் ஹீட்டட் விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றை இந்த புதிய எடிசனும் பெற்றுள்ளது.

பிரத்யேகமான நீல நிறத்தில் ஜாகுவாரின் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன்!! நம்மால் வாங்க முடியது...

1954ல் ரீம்ஸின் 12 மணிநேரங்கள் என்ற போட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்ற ஜாகுவார் டி-டைப் -ஆல் கவரப்பட்டு இந்த புதிய ரீம்ஸ் எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. யுகே-வில் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசனுக்கான முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

பிரத்யேகமான நீல நிறத்தில் ஜாகுவாரின் எஃப்-டைப் ரீம்ஸ் எடிசன்!! நம்மால் வாங்க முடியது...

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுவது வருகிற மார்ச் மாதத்தில் இருந்து துவங்கப்படவுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் கார் நம் நாட்டு சந்தைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், இதுபோன்ற ஸ்பெஷல் எடிசன் கார் ஏதாவது ஒன்றை ஜாகுவாரில் பிராண்டில் இருந்து விரைவில் நாமும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar F-Type Reims Edition debuts an exclusive blue paint scheme
Story first published: Friday, January 29, 2021, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X